தினகரன் புரோக்கர் சுகேஷின் போலீஸ் காவல் நீட்டிப்பு... டெல்லி நீதிமன்றம் அனுமதி
டெல்லி : இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரனின் இடைத்தரகர் சுகேஷ் சந்தரின் போலீஸ் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இடைத்தரகர் சுகேஷ் சந்தரை தினகரன் அணுகியதாகவும். மொத்தம் 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு முதல்கட்டமாக 1 கோடியே 30 லட்சம் பணம் அளித்ததாக டெல்லியில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்தர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கடந்த 3 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் 4வது நாளாக விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராக உள்ளார். டிடிவி தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பரிடம் இன்று காலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுகேஷ் சந்தரின் விசாரணை நடத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க டெல்லி போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும் சுகேஷ் சந்தர் மற்றும் டிடிவி தினகரன் உரையாடல் பதிவையும் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து சுகேஷின் போலீஸ் காவலை மேலும் 3 நாட்கள் அதாவது ஏப்ரல் 28ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இடைத்தரகர் பைசல் மற்றும் தினகரனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தருவதில் இடம் பெற்றிருந்த வழக்கறிஞர் கோபியிடமும் போலீசார் நாளை விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications