ரஜினி- கமலை முன்வைத்து திமுகவுக்கு எதிராக 'ஸ்கெட்ச்' போடும் டெல்லி!
திமுகவுக்கு எதிராக ரஜினிகாந்த், கமல்ஹாசனை ஒரே அணியில் இணைப்பது குறித்து டெல்லி வியூகம் வகுக்கிறதாம்.
Recommended Video

டெல்லி: அரசியல் கட்சிகள் தொடங்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசனை முன்வைத்து திமுகவுக்கு எதிரான வியூகத்தை தீவிரமாக வகுத்து வருகிறதாம் டெல்லி.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் கலகங்கள் ஏற்பட்டது. இந்த கலகங்களால் சட்டசபை தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதில் டெல்லி முனைப்பாக இருந்தது.
சட்டசபை தேர்தல் உடனே நடைபெற்றால் திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் அதை நோக்கி நகரவிடாமல் பாதுகாத்துக் கொண்டது டெல்லி. தற்போதும் கூட முதல்வர் எடப்பாடியார் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தொடரும் எடப்பாடியார் அரசு
ஆனாலும் எடப்பாடியார் அரசு தொடரட்டும் என்பதே டெல்லியின் நிலைப்பாடு. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கவே முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

குட்பை சொன்ன ரஜினி
அதனால்தான் ரஜினிகாந்தை முதல்வராக வேட்பாளராக முன்னிறுத்துகிறோம் என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனிக்கட்சி தொடங்குகிறேன்; அதன் பின்னர் பார்த்து கொள்ளலாம் என முதலிலேயே செக் வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

திமுகவுக்கு சாதகம்
இப்போது ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். கமல்ஹாசன் அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தேர்தல் களத்தில் தனித்து நின்றால் திமுகவுக்கே சாதகம்.

திமுக நிராகரிப்பு
தமிழக அரசியல் களம் குறித்த உளவுத்துறை அறிக்கைகளும் ரஜினி, கமல் இருவரும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவர்; ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என கூறுகின்றன. ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலை திமுக தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்டது.

கமலுக்கு செக்
திராவிடத்தின் குரலாக பேசி வரும் கமல்ஹாசனை திமுக வளைத்துவிட்டால் அது அக்கட்சிக்கு கூடுதல் பலமாகிவிடும். ஆகையால் கமல்ஹாசனை திமுக பக்கம் போகவிடாமல் நெருக்கடி கொடுப்பதில் டெல்லி தீவிரமாக இருக்கிறது.

ரஜினி-கமல் கூட்டணி
அதேபோல ரஜினிகாந்த்- கமல்ஹாசனையும் கூட்டணி சேர வைத்தால் திமுகவுக்கு நெருக்கடியைத் தர முடியும் என்பதும் டெல்லியின் வியூகம். எந்த சூழலிலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை அஜெண்டாதான் இப்போது டெல்லிக்கு என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications