For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீக்கடைக்காரருக்கு ஸ்டார் ஹோட்டலில் டோணி விருந்து: தல தல தான்

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: கிரிக்கெட் போட்டியில் விளையாட கொல்கத்தா சென்ற டோணி தான் டிக்கெட் செக்கராக இருந்த காலத்தில் டீ குடித்த கடையின் உரிமையாளரை பார்த்ததும் அவரை அடையாளம் கண்டுகொண்டு விருந்து அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் தல டோணியை கொண்டாடுவதில் தவறே இல்லை. மைதானத்தில் அவர் விளையாடும் நேர்த்தி, காட்டும் பொறுமை, சக வீரர்களுடன் பழகும் விதம், மைதானத்தில் பணியாற்றும் துப்புரவாளர்களையும் சரிசமமாக பார்ப்பது உள்ளிட்ட நற்குணங்களால் தான் அனைவரும் டோணி டோணி என்று பாசமாக உள்ளார்கள்.

இந்நிலையில் டோணி தனது பெருந்தன்மையை மீண்டும் காண்பித்துள்ளார்.

கொல்கத்தா

கொல்கத்தா

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாட டோணி கொல்கத்தா சென்றார். அங்குள்ள ஈடன் கார்டன் மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒருவரை பார்த்ததும் டோணி ஓடிப் போய் அவரை கட்டிப்பிடித்தார்.

டீக்கடைக்காரர்

டீக்கடைக்காரர்

டோணி கட்டிப்பிடித்த நபரின் பெயர் தாமஸ். அவர் மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில் டீக்கடை வைத்துள்ளார். டோணி டிக்கெட் செக்கராக இருந்தபோது தாமஸின் கடையில் தான் தினமும் டீ குடித்துள்ளார்.

விருந்து

விருந்து

டோணியை தூரத்தில் நின்றாவது பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கொல்கத்தா வந்த தாமஸை அவர் அடையாளம் கண்டுகொண்டதுடன் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலில் விருந்தும் கொடுத்து தாமஸை அசத்தினார் தல.

டோணி டீ ஸ்டால்

டோணி டீ ஸ்டால்

டோணி குறித்து தாமஸ் கூறும்போது, டோணி பாய் கராக்பூரில் இருந்த போது டீ குடிக்க என் கடைக்கு தினமும் 2 அல்லது 3 முறை வருவார். நான் கராக்பூருக்கு திரும்பிச் சென்றவுடன் என் கடைக்கு டோணி டீ ஸ்டால் என்று பெயர் வைக்கப்போகிறேன் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

English summary
He may not be playing international cricket as of now, but former India skipper Mahendra Singh Dhoni is still making headlines for his captaincy skills in the ongoing Vijay Hazare Trophy as well as for his gesture off-the field.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X