பெண் பத்திரிகையாளர் அம்ரிதாவுடனான தொடர்பு உண்மையே: காங். தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் அதிரடியாக ராஜ்யசபா டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் தமக்கும் தொடர்பிருக்கிறது..அவரையே திருமணம் செய்ய இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி குறித்து நீண்டகாலமாக கேள்வி எழுப்பியவர் திக்விஜய்சிங். நரேந்திர மோடியும் வேறுவழியின்றி தமது வேட்புமனுவில் மனைவி இருப்பதை ஒப்புக் கொண்டார்.

Digvijaya Singh admits to his relationship with TV journalist Amrita Rai

இப்போது அப்படியொரு சிக்கலில் மாட்டியிருக்கிறார் திக்விஜய்சிங். ராஜ்யசபா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் திக்விஜய்சிங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் இது தொடர்பான சில புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

திக்விஜய்சிங் ஒப்புதல்

இது குறித்து எதிர்க்கட்சிகள் கிடுக்குப் பிடி கேள்வி எழுப்பின. இப்போது திக்விஜய்சிங் வேறுவழியின்றி தமக்கும் அம்ரிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கும் இல்லை என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அம்ரிதாவும் அவரது கணவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரியுள்ளனர். அது முறைப்படி நடந்தவுடன் எங்களது திருமணமும் முறைப்படி நடக்கும் என்று கூறியுள்ளார் திக்விஜய்சிங். ஆனால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

அம்ரிதாவும் ஒப்புதல்

திக்விஜய்சிங்கைப் போலவே அம்ரிதாவும் தமது ட்விட்டர் பக்கத்தில், நான் எனது கணவரை விட்டு தனித்து வாழ்கிறேன். இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரியுள்ளோம். அதன் பின்னர் நான் திக்விஜய்சிங்கை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். திக்விஜய்சிங்கைப் போலவே தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பவர்களுக்கு கண்டனத்தையும் அம்ரிதா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு திக்விஜய்சிங்கின் மனைவி காலமானார். அப்போதே தாம் மனைவியை இழந்தவன்.. தான் மற்றொரு திருமணம் செய்தால் அதை யாரிடமும் மறைக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமது வயதில் பாதி கூட இல்லாத அம்ரிதாவை திருமணம் செய்யப் போவதாக திக்விஜய்சிங் பகிரங்கமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+