For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிவிருந்த குடும்பத்தை காப்பாற்றிய நாய்

By Rajeswari
Google Oneindia Tamil News

இடுக்கி: கேரளாவில் நிலச்சரிவில் சிக்கவிருந்த ஒரு குடும்பத்தை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

கேரள மாநிலத்தில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மேலும் கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக இதுவரை 37 பேர் உயிர்
இழந்துள்ளனர், 35000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 Dog Saves A Kerala Family From Devastating Landslide

இந்நிலையில் மோகனன் என்பவர் இடுக்கி மாவட்டத்தின் கஞ்சிகுழி என்ற ஊரில் தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.விடியற்காலை 3 மணி அளவில் அவர்
வீட்டின் நாய் குரைத்துள்ளது. ஆனால் அது வழக்கமான ஒன்று தான் என்று எண்ணி அவர் விட்டுவிட்டார். சிறிது நேரத்திற்கு பின் வழக்கத்திற்கு மாறாக ஊளையிட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்த மோகனன்
வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

மாடியில் இருந்த அவரது தாத்தா, பாட்டியை காப்பாற்ற முடியாமல் போனது.இது பற்றி அவர் கூறுகையில் "என் வீடு பெரியார் அணையை ஒட்டி உள்ள இடத்தில்
இருந்ததால் எங்களை அதிகாரிகள் வெளியேற சொன்னார். இதை அடுத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்தேன். அப்படி இருந்தும் இங்கேயும் நிலச்சரிவு ஏற்பட்டு என் தாத்தா,
பாட்டியை இழந்துவிட்டேன் " என்றார்.

English summary
A faithful dog has saved a family from a landslide in flood affected Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X