For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவிங்களுக்கு சின்ன வாய்ப்பும் கொடுக்காதீங்க.. நாட்டை பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்.. மோடி ஆவேச உரை

Google Oneindia Tamil News

மீரட்: ஊழல்வாதிகளுக்கு ஒரு சிறு வாய்ப்பு கொடுத்தாலும், நமது நாட்டை பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மீரட் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று எச்சரித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இன்று மதியம் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றினார். மிஷன் சக்தி திட்டத்தின் வெற்றிக்கு பிறகு நடைபெற்ற, முதல் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

Dont give these corrupt people get a tiny opportunity: PM Modi at Meerut rally

எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ!எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ!

இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: ஒவ்வொரு குடிமக்களுக்கும் வங்கி கணக்கு துவங்கியபோது, யாரெல்லாம் கேலி பேசினார்களோ, அவர்கள் இப்போது, அதே வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். பாஜக அரசு இப்படி அனைவருக்கும் வங்கி கணக்கை துவங்கியிருக்காவிட்டால் பணம் எப்படி செலுத்த முடியும். வங்கி கணக்கு துவங்கியது முந்தைய ஆட்சிகளை போல இடைத்தரகர்கள் சாப்பிட்டுவிட கூடாது என்பதற்காகத்தான்.

இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும், மோடி அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். 5 வருடங்கள் முன்பாக நான் உங்கள் ஆசியை நாடி வந்தேன். எனக்கு நிறைய அன்பை கொட்டிக் கொடுத்தீர்கள். வரும் லோக்சபா தேர்தல் மக்களின் எதிர்பார்ப்பு, கனவுகளை பூர்த்தி செய்ய உதவும் தேர்தல் என்பதை மறக்காதீர்கள்.

இந்தியாவில் முதல் முறையாக 2.5 கோடி குடும்பங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர். ஊழல்வாதிகள் மீண்டும் சிறு வாய்ப்பு கிடைத்தாலும், இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு சிறு வாய்ப்பும் கொடுத்துவிடாதீர்கள்.

விவசாயிகள்தான், அன்னதான பிரபுக்கள். அவர்கள் மேம்பாட்டுக்காகத்தான், வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.6000 செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இன்று இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றப்பட்டுள்ளது. விண்வெளியிலும் இந்தியா பாதுகாவலனாக மாறியுள்ளது.

English summary
Do we not need a mazboot sarkar for a mazboot country? If these Mahamilavat people get even a tiny opportunity, they'll return our country to the past says PM Modi at Meerut mega-rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X