குடியரசு தலைவர் தேர்தல்..50 ஆயிரம் லட்டுகள், நடன கலைஞர்கள் தயார்.. கொண்டாட காத்திருக்கும் ஒடிசா!
புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன் கொண்டாடுவதற்காக, அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் எம்பி-க்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டுகளும், எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் கடந்த 18ம் தேதி மாலையே விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திரெளபதி முர்முவின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் கொண்டாட்டங்களுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஒடிசாவின் மாநிலத்தின் ராய்ரங்பூர் பகுதியைச் சேர்ந்த திரெளபதி முர்முவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. திரெளபதி முர்மு வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது சொந்த கிராமத்திற்கு அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரும் ராய்ரங்பூர் வருகை புரிந்து வருகின்றனர். தங்கள் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் இந்தியாவின் மிக உயரிய பதவியில் அமர உள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இவர்கள் அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதில், ஒடிசா பழங்குடிகளின் பாரம்பரிய நடனமும் இடம்பெற உள்ளது. இதற்காக ஏராளமான நடன கலைஞர்கள் ராய்ரங்பூர் வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் திரெளபதி முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன், அவரை வாழ்த்தி வைக்கப்படுவதற்காக பெரும் பதாகைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications