Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீச்சில்.. மிட்நைட்டில்.. பைக் மீது ஏறி உட்கார்ந்து தண்ணி அடித்த பெண்.. கிட்ட போன போலீஸ்.. ஓ மை காட்

குடிபோதையில் போலீசாரை பீர்பாட்டிலால் தாக்கிய பெண் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருமலை: சாலையில் நள்ளிரவு ஒரு இளம்பெண் பைக்கில் அமர்ந்து மது குடித்துள்ளார். இதை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கி ரகளை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க 3வது நகர காவல் நிலைய போலீசார் நகரில் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் 2 நாட்களுக்கு முன்பும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.. ஆர்.கே.கடற்கரை சாலையிலும் போலீசார் ரோந்து சென்றனர்.. அப்போது ஒரு இளம்பெண் நடுரோட்டில் பைக்கில் உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார்..

 பீச் ரோடு

பீச் ரோடு

இதனால் போலீசார் அவரிடம் சென்று, அவர் யார்? என்ன? என்று விசாரிக்க முயன்றனர்... மேலும் நடுரோட்டில் விதிமீறி மது குடிப்பதையும் தடுக்க முயன்றனர்.. ஆனால் அந்த இளம்பெண்ணோ, ஏற்கனவே முழு போதையில் இருந்ததால், தள்ளாடியபடியே இருந்தார்.. போலீசாரை பார்த்ததுமே கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.. இருந்தாலும் போலீசார், அந்த பெண்ணிடம் போதையின் அளவை தெரிந்து கொள்ள, டெஸ்ட் செய்ய முயன்றனர்... இதனால் அந்த பெண், மேலும் ஆத்திரமடைந்து, போலீசாரை எட்டி எட்டி உதைத்துள்ளார்.. அத்துடன், தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலாலும் அவர்களை தாக்கியுள்ளார்..

 கண்ணாடி துகள்கள்

கண்ணாடி துகள்கள்

அப்போது இந்த சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இளைஞர் கோவிந்த் என்பவர் மீது, அந்த பீர் பாட்டில் துகள்கள் விழுந்ததில், படுகாயமடைந்தார். பீர்பாட்டில் உடைந்து கோவிந்த் கண்ணில்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது.. இதையடுத்து, போலீசார் கோவிந்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, இளம்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் கோவிந்த், போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார்...

 பீச் ரோட்டில்

பீச் ரோட்டில்

டியூட்டியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது, பொதுமக்களையும், போலீசாரையும் தாக்கியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.. அவர் யார் என்ற விவரங்களையும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அந்த பெண்ணிடம் விசாரிக்கும்போது, தனக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பதாகவும், அவனை வரவழைத்து எல்லா போலீஸ்காரர்களையும் தொலைத்துவிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்..

அமுல்யா

அமுல்யா

இவர் மது அருந்திய இடம், விசாகப்பட்டினம் பீச் பகுதியாகும்.. ரோந்து போலிசில், சத்யராநாயாணா என்ற இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணை தனியாக அழைத்து, நள்ளிரவு நேரத்தில் இப்படியெல்லாம் நடுரோட்டில் உட்கார்ந்து குடிப்பது என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.. ஆனால், அந்த சத்திய நாராயணாவுக்கும் சேர்ந்தே பீர்பாட்டிலால் அடிவிழுந்துள்ளது.. அதற்கு பிறகுதான் மகளிர் போலீசுக்கு தகவல் சொல்ல்லி, அவர்கள் இந்த பெண்ணை குண்டுக்கட்டாக ஸ்டேஷனுக்கு தூக்கி சென்றுள்ளனர்.. இந்த பெண் எவ்வளவு குடித்திருக்கிறார் என்று மகளிர் போலீசார் டெஸ்ட் செய்திருக்கிறார்கள்.. அவரது மூச்சுக்காற்றில் 148.1 அளவிற்கு ஆல்கஹால் இருந்ததாம்.. அந்த பெண்ணுக்கு போதைதெளிந்ததும் பெயர் என்ன கேட்டுள்ளார்கள்.. "அமுல்யா" என்றாராம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+