அதிர்ச்சி... 8 மாத குழந்தையின் உயிரை பறித்த அமைச்சரின் ஊர்வலம்... ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திராவில் புதிதாக பதவியேற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷா ஸ்ரீசரண் ஊர்வலத்துக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உரிய நேரத்தில் மருத்துவமனை செல்ல முடியாமல் 8 மாத குழந்தை உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக செயல்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது அமைச்சரவையை முற்றிலுமாக மாற்றி அமைத்தார்.
இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உஷா ஸ்ரீசரண் நியமிக்கப்பட்டார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முதலாக அவர் தனது தொகுதி நோக்கி புறப்பட்டார்.

தம்பதி தடுத்து நிறுத்தம்
இதையடுத்து அவருக்கு வரவேற்பு கொடுக்க கட்சியினர் ஏற்பாடு செய்தனர். மேலும் அவரது காரை பின்தொடர்ந்து தொண்டர்கள் பல கார்களில் அணிவகுத்தனர். இந்த ஊர்வலத்தின் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அனந்தபூர் மாவட்டம் கல்யான்துர்கம் பகுதியில் அமைச்சரின் ஊர்வலத்துக்கு போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதில் கணேஷ்-ஈஸ்வரப்பா தம்பதியும் சிக்கி கொண்டனர்.

8 மாத குழந்தை பலி
இவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களின் 8 மாத குழந்தையை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தாமதமாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அமைச்சர் ஊர்வலத்தால்...
இதனால் குழந்தையின் உடலை பார்த்து கணேஷ் - ஈஸ்வரம்மா தம்பதி கதறி அழுதனர். மேலும் குழந்தைகளின் இறப்புக்கு அமைச்சரின் ஊர்வலம் தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த ஊர்வலத்தால் குழந்தையை அரை மணிநேரம் தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், இதனால் தான் குழந்தை இறந்ததாகவும் கூறி அழுதனர். மேலும் இதை கண்டித்து அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்தை நிறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கொலை என குற்றச்சாட்டு
இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் கண்டனம் தெரிவித்து கொலை என குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‛‛அமைச்சரின் ஊர்வலத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இது கொலையாகும். குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு இப்போது அரசு என்ன சொல்ல போகிறது '' என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications