சர்ச்சையான வீடியோ.. வகுப்புவாத பதிவை நீக்க ஜார்க்கண்ட் பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
ராஞ்சி: ஜார்கண்ட்டில் 2வது கட்ட தேர்தல் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக வெளியிட்ட வகுப்புவாதம் சார்ந்த சர்ச்சை வீடியோவை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த சோரன் முதல்வராக உள்ளார். பாஜக எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஜார்கண்ட்டில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜார்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி 41 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 2வது கட்டமாக வரும் 20ம் தேதி மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 2வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைய உள்ளது. தற்போது கடைசி கட்ட பிரசாரம் தீவிரமாகி உள்ளது. அதன்படி ஆளும் கட்சியாக உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியை விளாசி வருகின்றன.
இந்நிலையில் தான் பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக உள்ளதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஜார்கண்ட் பாஜகவின் சோசியல் மீடியாக்களில் இஸ்லாமியர்கள் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை தொடர்புபடுத்தி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி அதில், ‛‛ ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ஓட்டுகளை மாற்றுவதல் பெரிய தவறு நடந்து விடும் என்பதை கவனத்தில் வைத்து கொண்டு வாக்களிக்க வேண்டும். கடந்த காலமான 2019ல் செய்த தவறை இப்போது செய்யாதீர்கள். இந்த முறை சரியாக வாக்களித்து பாஜகவை தேர்வு செய்யுங்கள்'' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவு சர்ச்சையானது.
இதையடுத்து பாஜகவுக்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்தன. அடிப்படை ஆதாரமின்றி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக வீடியோ வெளியிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி விசாரணை நடத்திய ஜார்கண்ட் மாநில தேர்தல் அதிகாரி அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அதில் பாஜக பதிவிட்ட வீடியோவை நீக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பாஜக பதிவிட்ட பதிவை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் விதிமீறி நடந்து கொண்டது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications