ஃபேப்இந்தியா கடையில் பெண்கள் உடைமாற்றுகையில் வயிறுவரை கேமராவில் பதிவாகியிருந்தது: எம்.எல்.ஏ. லோபோ
பனாஜி: ஃபேப்இந்தியா கடையில் பெண்கள் உடைமாற்றுவதை கேமரா மூலம் படம்பிடித்துள்ளனர் என்று கன்டோலிம் தொகுதி எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவின் கன்டோலிம் நகரில் உள்ள ஃபேப்இந்தியா துணிக் கடைக்கு சென்று ஆடை வாங்கினார். அதை போட்டுப் பார்க்க உடைமாற்றும் அறைக்கு சென்ற அவர் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உள்ளூர் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தகவல் கொடுத்தார்.
லோபோ அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்கு சீல் வைத்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து லோபோ கூறுகையில்,

ஸ்மிருதி
ஸ்மிருதி இரானிக்கு கோவாவில் வீடு உள்ளது. இந்நிலையில் அவர் 2 நாட்கள் விடுமுறையை கழிக்க இங்கு வந்தார். அவர் கன்டோலிமில் உள்ள ஃபேப்இந்தியா கடைக்கு சென்று சில துணிகளை தேர்வு செய்து உடை மாற்றும் அறைக்கு சென்றார். அங்கு அந்த அறையில் காற்றோட்டத்திற்காக சுவரில் பெரிய ஓட்டைகள் இருந்துள்ளது. அந்த வழியாக வெளியே வைக்கப்பட்டிருந்த கேமரா லென்ஸ் தெரிந்துள்ளது.

புகார்
இதை பார்த்து அதிர்ந்த அவர் அவரின் கணவருக்கும், எனக்கும் தகவல் கொடுத்தார். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் நான் போலீசாருக்கு தகவல் அளித்தேன். அவர்கள் வந்து பதிவான வீடியோவை பார்த்தபோது பெண்கள் உடைமாற்றுவது படம்பிடிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.

கேமரா
அந்த கேமராவில் பதிவானவற்றை நானும் பார்த்தேன். கடைசி அரை மணிநேரத்தில் பதிவானவற்றை பார்த்தேன். அதில் பெண்கள் உடைமாற்றும் காட்சிகள் இருந்தன. பெண்களின் வயிறு வரை அதில் தெரிந்தது.

போலீஸ்
போலீசாரும் அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு கேமராக்களை பறிமுதல் செய்தனர். ஸ்மிருதி இரானி தனது வாக்குமூலத்தை அளித்தார் என்று லோபோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications