For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏடிஎம்மில் பணம் எடுக்க கியூவில் நின்று பலியானவரின் குடும்பம் நிவாரணம் கோரி வழக்கு

டெல்லியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பலியான முதியவரின் குடும்பத்தினர் ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக 3 நாள் கியூவில் காத்திருந்து அதனால் ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் மரணமடைந்த முதியவரின் குடும்பத்தினர், மத்திய அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்த முதியவரின் பெயர் சியாராம். 70 வயதான அவர் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தாராம். நவம்பர் 17ம் தேதி அவர் ஒரு ஏடிஎம் மையத்தின் முன்பு வரிசையில் காத்திருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Family of senior citizen who died in queue moves SC- Seeks Rs 50 lakh compensation

இதுகுறித்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த கன்ஹயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் சியாராம் 3 நாட்களாக பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வந்து காத்துக் கிடந்தால். அதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்து போய் உயிரிழந்து விட்டார்.

தலைநகரில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மெஷின்களில் பணம் வருவதில்லை. மத்திய அரசின் அலட்சியத்தால்தான் சியாராம் மரணமடைந்தார். எனவே மத்திய அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார் கன்ஹாயா.

English summary
The family of a senior citizen who allegedly died while waiting in queue to exchange old cxurrency has moved the Supreme Court seeking compensation of Rs 50 lakh from the union government. Siya Ram aged 70 a daily wager died on November 17 due to brain haemorrhage. Kanaihya, belonging from his family moved the Supreme Court his father was in queue for three days to get his currency exchanged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X