உலகமே வியந்து பார்த்த ஸ்வீட்டியை நினைவிருக்கா? கணவன் மீது அமர்ந்து கும்மாங்குத்து.. ஆடிப்போன ஹரியானா
சண்டிகர்: உலகமே வியந்து பார்த்த 2 விளையாட்டு வீரர்களும் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்தனர்.. இவர்களை கண்டு இந்திய மக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அன்று ஒட்டுமொத்த பேருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்த இந்த தம்பதியினர் இப்போது, கவலையை தந்துள்ளனர்.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2022ல் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இந்திய மக்களின் கவனத்தை பெற்றவர் ஸ்வீட்டி பூரா.. இவர் 2023-ல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை முத்தமிட்டு உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தார்.. இதனால் இந்திய தேசமே பூரித்து மகிழ்ந்தது.

இதுபோலவே இந்தியா பெருமைகொள்ளும் மற்றொரு கபடி வீரர் பெயர் தீபக் ஹூடா.. கடந்த 2014ல் ஆசிய கபடி போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2016-ல் தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் தீபக் நிவாஸ் ஹூடா.
வியக்க வைத்த விளையாட்டு ஜோடி
பிறகு, 2022-ல் குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டிக்கும், கபடி வீரர் தீபக் ஹூடாவுக்கும் தடபுடலாக திருமணம் நடந்தது. இருவருமே தங்கள் இல்லற வாழ்வை மகிழ்ச்சியுடன் துவங்கினார்கள்... ஆனால், ஒருசில மாதங்களிலேயே இருவருக்குள்ளும் தகராறுகள் வெடிக்க துவங்கிவிட்டன.. கருத்து வேறுபாடு அதிகமாகிவிடவும், தம்பதி இருவருமே ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டனர். கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரை இவர்களது விவகாரம் சென்றது..

இதுகுறித்து ஸ்வீட்டி, ஹிசார் போலீசாரிடம் சொல்லும்போது, தன்னுடைய கணவரும், மாமியார் வீட்டினரும் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள்.. அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார்கள். ஒரு அளவுக்குமேல் அவர்களது கொடுமை தாங்க முடியாமல், டைவர்ஸ் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போலீசாரும் இந்த புகார் தொடர்பாக தீபக்குக்கு 3 முறை சம்மன் அனுப்பினார்கள். ஆனால், தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி தீபக் ஹூடா போலீஸ் ஸ்டேஷனில் 3 முறையும் ஆஜராகாமலே இருந்தார்..

ஸ்டேஷனிலேயே கும்மாங்குத்து
இந்நிலையில், ஹிசார் ஸ்டேஷனில், தன்னுடைய குடும்பத்தினருடன் ஆஜராக வந்தார்.. அப்போது ஸ்வீட்டியும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஸ்டேஷனுக்கு வந்தார்.. போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் சமாதானம் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, தம்பதி இருவருமே மாறி மாறி குற்றஞ்சாட்டி கொண்டனர்.
அதிலும்,ஸ்வீட்டி மீது தீபக் தாறுமாறான குற்றச்சாட்டை சொல்லவும், கடும் ஆவேசமடைந்த ஸ்வீட்டி, கணவரின் கழுத்தை பிடித்து கடுமையாக தாக்கினார்.. ஸ்வீட்டியை அங்கிருந்த யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு ஒருவழியாக போலீசாரும், குடும்பத்தினரும் சேர்ந்து ஸ்வீட்டியை கட்டுப்படுத்தி, சண்டையை விலக்க முற்பட்டனர்.. அப்போதுகூட, அனைவரையும் மீறி, கணவரையே சுற்றி சுற்றி வந்து தாக்க முற்பட்டார் ஸ்வீட்டி .. பிறகு போலீசார் ஸ்வீட்டியை சமாதானப்படுத்தினார்கள்.

உயிருக்கு ஆபத்து - வீடியோ
இதையடுத்து, தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதற்கு கணவர் தீபக் ஹூடா தான் காரணம் என்று ஸ்வீட்டி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த இந்த நிகழ்வுகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர். இதைப்பார்த்து, விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைந்தால் இப்படித்தான் நடக்குமா? என்று மலைத்துப்போய் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications