லவ் கேட்குதா? பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூர அப்பா.. பேஸ்புக் லைவில் நடந்த கொடூரம்!
அமராவதி: தனது பேச்சை கேட்காமல் காதலித்ததால் தனது சொந்த மகளையே தந்தை ஒருவர் துடிக்க துடிக்க அடித்து கொன்றுவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை
இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐ டவுன் பகுதியில் வர பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் 2 மகள்கள் இருக்கின்றனர். ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். மகள்கள் தந்தை வரபிரசாத்தின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரசாத்தின் மூத்த மகள் வேறு ஒரு சாதியை சேர்ந்த பையனை காதலிப்பதாக கூறியுள்ளார்.

காதல்
ஆனால் இதற்கு தந்தை பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அப்பெண் வீட்டை விட்டு காதலனுடன் சென்றுவிட்டுள்ளார். இதனால் பிரசாத் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் தனது 16 வயது இளைய மகளை அதீத அன்புடன் வளர்த்துள்ளார். ஆண்கள் யாருடனும் பேசக்கூடாது எனவும், வீட்டிற்கு 6 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்நிலையில், இளைய மகளின் நடத்தையில் சில மாற்றங்கள் தெரிந்திருக்கிறது. இது குறித்து விசாரிக்கையில் மகள் காதலிப்பது தெரிய வந்துள்ளது.

அறிவுரை
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மகளை கடுமையாக திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் பிரசாத் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகார் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி ரேவதி, சிறுமியை நேரில் சந்தித்து அறிவுரை வழங்கியுள்ளார். பின்னர் தந்தை, மகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து வெள்ளி கிழமையான நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம்
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் தந்தை பிரசாத் தனது மகளை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலில் நிலைகுலைந்து மகள் கீழே சரிந்து விழுந்துள்ளார். பிரசாத் அதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் மகளை தாக்கியுள்ளார். இதனால் அவரது 16 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் நேரலையில் சம்பவம் குறித்து பிரசாத் பதிவு செய்துள்ளார். அதில், 'நான் அந்த பையனுக்காக என் மகளை வளர்க்கவில்லை. கல்வியையும், பொறுப்பையும் அவளுக்கு கற்பித்திருந்தேன். அவளை குத்துச் சண்டை வகுப்புகளுக்கு அனுப்பினேன். அதேபோல அவள் விருப்பப்பட்ட பள்ளியில் அவளை சேர்த்தேன்.

கைது
அவளுடைய எதிர்காலத்திற்காக என்னுடைய எதிர்காலத்தை தியாகம் செய்தேன். எனக்கு தெரியும் இது ஒரு தந்தையின் கடமை என்று. ஆனால் அவள் சமீப நாட்களாக எல்லாவற்றிலிருந்தும் விலகி செல்கிறாள். இது எனக்கு பிடிக்கவில்லை. இன்று எனது தாயின் நினைவுநாள். எனவே இதே நாளில் அவளை கொன்றிருக்கிறேன்' என்று கூறி சடலத்தையும் நேரலையில் அவர் காட்டியுள்ளார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கும் தெரிந்ததையடுத்து தந்தை வரபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதைவிட கொடுமை என்னவெனில் உயிரிழந்த சிறுமிக்கு சனிக்கிழமையான நேற்று பிறந்த நாள் என்பதுதான். காதலித்ததற்காக தனது 16 வயது மகளையே கொடூரமாக கொலை செய்துள்ள தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications