உறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகம்.. கடுப்பாகி குத்திக் கொன்ற 2 ஆண் காண்டாமிருகங்கள்!
கொல்கத்தா: மேற்குவங்க தேசிய பூங்காவில் உடலுறவுக்கு மறுத்த பெண் காண்டாமிருகத்தை, இரண்டு ஆண் தங்களது கொம்புகளால் முட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ளது ஜல்தபாரா தேசிய பூங்கா. இந்த பூங்காவில் காண்டாமிருகங்களும் உள்ளன. அவற்றில் பெண் காண்டாமிருகம் ஒன்றிற்கு பிறந்த குட்டி ஒன்று அண்மையில் உயிரிழந்தது. இதனால் சோகமான மனநிலையில் பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளது தாய் காண்டாமிருகம்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு ஆண் காண்டாமிருகங்கள் அந்த பெண் காண்டாமிருகத்துடன் உறவு கொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் அதற்கு பெண் காண்டாமிருகம் சம்மதிக்காததால், அவற்றிற்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த ஆண் காண்டாமிருகங்கள், தங்களது கொம்புகளால் பெண் காண்டாமிருகத்தை கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூங்கா காவலர்கள், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அந்த சத்தத்திற்கு அஞ்சாத ஆண் காண்டாமிருகங்கள், அந்த பெண் காண்டாமிருகத்தை குத்திக் கொலை செய்தன.
பெண் காண்டாமிருகம் உயிரிழந்த பிறகும், ஆவேசம் அடங்காத ஆண் காண்டாமிருகங்கள் அதன் அருகிலேயே அமர்ந்திருந்ததாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே பெண் காண்டாமிருகத்தின் உடலை மீட்டு, அவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது இந்திய வன வரலாற்றில் அரிய அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் ஒன்று என்றும், இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications