For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செக் புக்குகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை... நிதி அமைச்சகம் விளக்கம்!

வங்கிகளில் பயன்படுத்தும் காசோலைகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலைகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் கடந்த வாரம் ஊடகங்களிடம் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தார். அதில டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எதிர்காலத்தில் வங்கிக் காசோலைகளைத் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

Finance ministry rejects the media spread news that cheque book has been withdrawn

அவ்வாறு வங்கிக் காசோலைகளுக்கு முடிவு எட்டப்பட்டால் அது வணிகர்களை வெகுவாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு கருத்துகளை பதிவிட்டுள்ளது. அதில் வங்கிக் காசோலைகளை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகும தகவலில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு டுவீட்டில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தையை ஊக்குவிக்கும் வகையில் காசோலைகளுக்கு மூடுவிழா காணப்பட உள்ளதாக சில ஊடகங்கள்செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மையில்லை மத்திய அரசு இதுபோன்றதொரு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்வதாகக் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

English summary
Finance ministry clarified in a tweet that the Government of India has reaffirmed that there is NO proposal under consideration to withdraw the bank Cheque Book facility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X