மும்பையில் மேலும் ஒரு தீ விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி.. 5 பேர் படுகாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தின் சிற்றுண்டி விடுதியில் கடந்த வியாழக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோகம் தணிவதற்குள் நேற்று நள்ளிரவு மும்மையில் மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நள்ளிரவில் தீ விபத்து

நள்ளிரவில் தீ விபத்து

இதையடுத்து 2.10 மணிக்கு அப்பகுதியில் உள்ள தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு 2.30 மணிக்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

5 மணிவரை போராட்டம்

5 மணிவரை போராட்டம்

2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். காலை 5 மணிக்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

4 பேர் உயிரிழப்பு

இருப்பினும் இந்த விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

படுகாயமடைந்த 5 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One more fire accident in Mumbai. Four people including two children have died and five seriously injured in a fire accident at building in Mumbai's Marol area last night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற