நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிபத்து... 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்புடன் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லூர்: ஆந்திரா மாநிலம், நெல்லூரில் உள்ள மருத்துவமனையில் தீவிபத்து நிகழ்ந்தது. இதில் வெளியேற முடியாமல் தவித்த 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிக்கித் தவித்தனர்.

Fire accident in Nellur district government hospital

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினர். பின்னர் மருத்துவமனையில் பரிதவித்து வந்த நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டனர். இந்த தீ விபத்தில் கோப்புகள் வைக்கும் அறை முழுவதுமாக எரிந்தது.

மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டதால் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire accident in Nellur district government hospital in koodur. Hundreds of patients stranded inside the hospital.
Please Wait while comments are loading...