For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை மக்களுக்கு "குளுகுளு" கிறிஸ்துமஸ் கிஃப்ட்!

நாட்டிலேயே முதல்முறையாக மும்பை புறநகர் பகுதிகளுக்கு ஏசி ரயில்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் குளு குளு ரயில் திட்டம் வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலே முதல்முறையாக ஏசி லோக்கல் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இருந்த திட்டம் தற்போது மும்பையில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதுவும் புறநகர் பகுதிகளுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

First suburban AC trains to introduce in Mumbai as a Christmas Gift

150 வருஷத்திற்கு முன் 1867 ஆண்டு இதே நாளில் முதல் முறையாக புறநகர் நீராவி ரயில் இயக்கப்பட்டது. இதனை போற்றும் விதமாக வரும் திங்கட்கிழமை மதியம் 2.10க்கு அந்தேரி முதல் சர்ச்சாகேட் வரை இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. ஒருநாளைக்கு 12 டிரீப் என்ற கணக்குடன் இந்த ரயில் சேவையை, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் துப்புரவு பணிக்காக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும்

நவீனமுறைப்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவு, எல்ஈடி விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இண்டர்கனைக்ட் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரே டிரீப்பில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்ய முடியும் என்றும், இதனால் நாள் ஒன்றுக்கு 6ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

English summary
Railways will unveil the first air-conditioned suburban trains for Mumbai commuters from Monday as a Christmas Gift. This is the first train of its kind in the country and it is to be launched in 150 anniversary of the suburban train day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X