For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பெண்ணே! ரத்தம் உறையும் சியாச்சின் மலையில்.. களமிறக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி.. சல்யூட்

Google Oneindia Tamil News

சியாச்சின்: உலகிலேயே மிக உயரமான போர்முனையாக அறியப்படும் சியாச்சின் பனிமலையில் முதன்முதலில் ஒரு பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.

மிகக் கடுமையான குளிரும், பனிப்பொழிவு நிலவி வரும் சியாச்சின் போர்முனையில் துணிச்சலாக பணியாற்ற முன்வந்த பெண் அதிகாரி ஷிவா சவுகானுக்கு இந்திய மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற வேட்கைக் கொண்டவராக வளர்ந்த ஷிவா சவுஹான், சியாச்சினில் பணியாற்ற விரும்பிக் கேட்டு வந்திருக்கிறார்.

ஏஞ்சல் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம் ! 1 டிரில்லியன் கனவுக்கான வெற்றிப்படியில் ஸ்டாலின் அரசுஏஞ்சல் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம் ! 1 டிரில்லியன் கனவுக்கான வெற்றிப்படியில் ஸ்டாலின் அரசு

ரத்தம் உறைய வைக்கும் சியாச்சின்

ரத்தம் உறைய வைக்கும் சியாச்சின்

இமாலயத்தில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் 23 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது. அங்கு ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு பனி இருக்கும். காலையில் மைனஸ் 25 டிகிரியும், இரவில் மைனஸ் 55 டிகிரியும் வெப்பநிலை நிலவும் என்றால், அங்கு குளிர் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். இந்த அதிகபட்ச குளிரால் இங்கு தங்குவது என்பது மிகவும் கடினம் ஆகும். மேலும், நல்ல உணவும், குடிநீரும் கூட இங்கு கிடைக்காது. இங்கு பணியாற்றுவதற்கென ராணுவ வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சியாச்சின் உச்சியில் ராணுவ வீரர்கள் 90 நாட்களுக்கு பணியாற்ற வேண்டியிருக்கும். அதன் பிறகு ஷிப்ட் முறையில் மற்ற ராணுவ வீரர்கள் இங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

முதல் பெண் அதிகாரி

முதல் பெண் அதிகாரி

இந்நிலையில், சியாச்சின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் ராணுவ அதிகாரி இங்கு பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். அவரது பெயர் ஷிவா சவுகான். கேப்டன் பதவியில் இருக்கும் ஷிவா சவுகான், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2-ம் தேதி 15,632 அடி உயரத்தில் உள்ள சியாச்சினின் குமார் போஸ்ட் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து, சியாச்சினில் உள்ள இஃபயர் அண்ட் ஃப்யூரி (fire and fury) ராணுவப் படைப்பிரிவு, கேப்டன் ஷிவா சவுகானின் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.

சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்

சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்

ஷிவா சவுஹான் 11 வயதில் இருக்கும் போதே தந்தையை இழந்துவிட்டார். சிறு வயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தீரா வேட்கை ஷிவா சவுகானுக்கு ஏற்பட்டது. இதனால், ஏழ்மை நிலையிலும் பள்ளிப்படிப்பையும், சிவில் இன்ஜினியரிங் படிப்பையும் முடித்த ஷிவா சவுகான், பின்னர் ராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த ஷிவா சவுகான், கடந்த 2021-ம் ஆண்டு 'இன்ஜினியர் ரெஜிமென்ட்' படைப்பிரிவில் இணைந்தார். இதையடுத்து, பெரும்பாலான ஆண் ராணுவ வீரர்களே பணியாற்ற தயங்கும் சியாச்சினில் பணி வாய்ப்பு வழங்குமாறு ஷிவா சவுகான் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

சவால்கள் நிறைந்த சியாச்சின்

சவால்கள் நிறைந்த சியாச்சின்

சியாச்சினின் ஆண்டு முழுவதும் பனி உறைந்திருப்பதால் தூய குடிநீர் கிடைப்பது என்பது மிக மிக அரிது. இதனால் அங்குள்ள ராணுவ வீரர்கள் தாங்கள் கொண்டு வரும் நீரை, நெருப்பில் காட்டி உருக வைத்து சிறிது சிறிதாகவே பருக வேண்டும். அதேபோல, எல்லா வகை உணவுகளையும் அங்கு சாப்பிட முடியாது. ஏனெனில், அவை குளிரில் கல் போல உறைந்துவிடும். எனவே, வெறும் பிரட், பன் போன்றவற்றை மட்டுமே அங்கு சாப்பிட முடியும். இங்கு பணியாற்றுவதற்கென ராணுவ வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சியாச்சின் உச்சியில் ராணுவ வீரர்கள் 90 நாட்களுக்கு பணியாற்ற வேண்டியிருக்கும். அதன் பிறகு ஷிப்ட் முறையில் மற்ற ராணுவ வீரர்கள் இங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்களுக்கு எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் பாலியல் ஆர்வம் குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

English summary
A woman army officer has been posted for the first time at the Siachen glacier, which is known as the highest battlefront in the world. People of India are praising the woman officer Shiva Chauhan who volunteered to serve bravely on the Siachen front in extreme cold and snow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X