குஜராத்தில் மோடி நிகழ்ச்சிக்கு டிமிக்கி கொடுத்த 5 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்
அகமதாபாத்: குஜராத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அவர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நவ்ரச்னா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவர்களின் பெற்றோரோ தங்கள் பிள்ளைகள் வகுப்பிற்கு செல்லாததால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர்.
பள்ளி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் நரேந்திர ராவத் கூறுகையில்,
இப்படி தான் மோடியின் பேரணிகளுக்கும், கூட்டங்களுக்கும் பாஜக கூட்டத்தை கூட்டுகிறது. இதை எங்கள் கட்சி எதிர்க்கும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications