For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்பாளரை விடுங்க தாமரை, மோடியை காட்டி ஓட்டு சேகரிங்க... அமித்ஷா அட்வைஸ்!

வேட்பாளர் யாராக இருந்தால் என்ன தாமரை, பிரதமர் நரேந்திர மோடியை முன்வைத்து வாக்கு சேகரியுங்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பேசியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

பெங்களூரு : வேட்பாளர் யாராக இருந்தால் என்ன தாமரை, பிரதமர் மோடியை முன்வைத்து வாக்கு சேகரியுங்கள் என்று கர்நாடக பாஜகவினருக்கு தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுரை கூறியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றவும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. பா.ஜ.க சார்பில் எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜ.க தேசியதலைவர் அமித்ஷா கர்நாடகாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். கர்நாடகா தேர்தலில் பூத் அளவில் பாஜகவினர் அக்கறை செலுத்த வேண்டும் என்று அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

வேட்பாளர் யாராக இருந்தால் என்ன

வேட்பாளர் யாராக இருந்தால் என்ன

பந்த்வால் பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித்ஷா தொகுதியில் வேட்பாளர் யார் என்பதைப் பற்றி தேர்தல் பணியாற்றுபவர்கள் கவலைப்பட வேண்டாம். கட்சியின் சின்னமான தாமரையையும், மோடியின் புகைப்படமும் போதும். சட்டசபை தொகுதி உங்களது இலக்கு அல்ல. ஒவ்வொரு பூத்தும் நமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

இலக்கு பூத் வாரியாக இருக்க வேண்டும்

இலக்கு பூத் வாரியாக இருக்க வேண்டும்

சட்டசபை தொகுதியை வெல்வது மட்டுமே உங்களது நோக்கமாக இருக்கக் கூடாது ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் நாம் முழுமையான வெற்றி பெறலாம். 4 கோடி வாக்களர்களிடம் நீங்கள் செல்ல வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.

பாஜக தீவிரம்

பாஜக தீவிரம்

தேர்தல் ஆணைய புள்ளி விவரப்படி கர்நாடகாவில் 56 ஆயிரம் பூத்கள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுமார் ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். கர்நாடகாவில் மொத்தம் 49 கோடி மக்கள் உள்ளனர்.

எடியூரப்பாவை முன் நிறுத்தும் பாஜக

எடியூரப்பாவை முன் நிறுத்தும் பாஜக

பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் எடியூரப்பா கர்நாடகாவில் முதன் முதலில் பாஜக ஆட்சியை அமைத்தவர். 200 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தவர் என்பதால் அவருக்கே மீண்டும் வாய்ப்புகள் தரப்படுவதாக சொல்லப்படுகிறது.

English summary
BJP national president Amit Shah tells workers in Karnataka forget about candidates ask vote for party symbol lotus and with Modi photo
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X