ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்... 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஷோபியன் மாவட்டத்தில் உள்ள ஹிபுரா பட்டாகன்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த பகுதியில் ரோந்து பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினர்.

அப்போது, வீட்டில் மறைந்து இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பதிலடி தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இறங்கினர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து, தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது
கடந்த மூன்று தினங்களில் மட்டும், 14 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
