For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புனே பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவர் 'பி கிரேட்' நடிகர் கஜேந்திர சவுகானுக்கு ஆர்.எஸ்.எஸ். வக்காலத்து

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: புனே பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக பி கிரேட் நடிகர் கஜேந்திர சவுகானை நியமித்ததை பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நியாயப்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. www.swastik.net.in என்ற இணையதளத்தின் நிறுவனரான சந்தீப்சிங் என்பவர்தான் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

FTII row: RSS mouthpiece defends Gajendra Chauhan, hits out at former chairmen

அதில், கஜேந்திர சவுகானை எதிர்ப்பவர்கள் 'இந்துக்களுக்கு எதிரானவர்கள்; இதேபோல் புனே பிலிம் இன்ஸ்டிடியூட் முன்னாள் தலைவர்களாக இருந்த மிருணாள் சென் ஒரு மார்க்சிஸ்... கிரிஷ் கர்ணாட், இந்துமத வெறுப்பாளர், ஆபாச படத்தை ஊக்குவித்தவர் மகேஷ் பட், பாரதிய ஜனதாவுக்கு எதிரானவர் சியாம் பெனெக்ல்

புனே இன்ஸ்டிடியூட் இயக்குநர் சயீத் மிர்ஸா ANHAD என்ற என்.ஜி.ஓவின் பொருளாளராக இருந்தவர். புனே பிலிம் இன்ஸ்டிடியூட் காங்கிரஸாரின் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசான புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

புனே பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக ஆபாசப் பட நடிகர் கஜேந்திர சவுகானை நியமித்ததற்கு எதிராக மாணவர்கள் ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். சவுகானுக்கு ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After facing a backlash from across all quarters in the film industry, Film and Television Institute of India (FTII) chairperson Gajendra Chauhan has found solace from the Rashtriya Swayamsevak Sangh (RSS).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X