For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஜி.பரமேஸ்வரா தேர்வு!

கர்நாடகா மாநில சட்டசபையின் காங்கிரஸ் குழுத்தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகா மாநில சட்டசபையின் காங்கிரஸ் குழுத்தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்த உறுப்பினரான இவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

G Parameshwara selected as The Karnataka Congress Legislative Committee chairperson

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஈகிள்டன் சொகுசு விடுதியில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கி இருக்கிறார்கள். இன்று இரவு இவர்கள் கேரளா கிளம்ப வாய்ப்புள்ளது. இதற்கு இடையில் காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில சட்டசபையின் காங்கிரஸ் குழுத்தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்த உறுப்பினரான இவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பெங்களூரு ஹோட்டலில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தார். இவர் கோரட்டேகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
G Parameshwara selected as The Karnataka Congress Legislative Committee chairperson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X