கேட்ஜெட் மோகம்... குஜராத்தில் பாலியல் தொழிலாளியாக மாறிய 13 வயது சிறுமி!
வதோதரா: கேட்ஜெட் மோகத்தால் குஜராத்தில் 13 வயது சிறுமி பாலியல் தொழிலாளியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்ட் போன்களுடன் இணைத்து உபயோகிக்கப்படும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அதி நவீன கேட்ஜெட் கருவிகளை வாங்குவதில் இளம் தலைமுறையினரிடையே பெரும் மோகம் காணப்படுகிறது. ஆனால், இத்தகைய ஆசைகளே பல துன்பத்திற்கு காரணமாகி விடுகின்றன என்பது காலம் கடந்து தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது.
அப்படித் தான் குஜராத் மாநிலத்தில் புதிய கேட்ஜெட் வாங்கும் ஆசையில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறியுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் சுபன்புரா பகுதியில் மரக்கன்றுகள் விற்கும் கடை நடத்தி வரும் பெண் ஒருவரின் 13 வயது மகள் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. கர்ப்பம் தொடர்பாக அச்சிறுமியிடம் விசாரித்த போது, அவர் கடந்த ஓராண்டு காலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதற்கென ரகசியமாக மொபைல் போன் ஒன்றைப் பயன்படுத்தி வந்துள்ளார் அச்சிறுமி. அதன் மூலம் தனது தாய் வீட்டில் இல்லாத சமயங்களில், வீட்டிலேயே பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
புதிய கேட்ஜெட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலில் ஈட்பட்டதாக அச்சிறுமி கூறியதைக் கேட்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் அறையில் சோதனை செய்த போது பல விலையுயர்ந்த கேட்ஜெட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டது
பின்னர், அச்சிறுமிக்கு 'அபயம்' என்ற அமைப்பு மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் தந்தை இறந்து 3 வருடங்கள் ஆன நிலையில், அவளது தாய் எவ்வளவு சிரமப்பட்டு அவளை வளர்க்கிறார் என்பதை கவுன்சிலிங் கொடுத்தவர்கள் அவருக்கு புரிய வைத்தனர்.












Click it and Unblock the Notifications