5 மாநில தேர்தலில்.. பெரிய தோல்வி காங்கிரசுக்கு அல்ல.. திரிணாமுலுக்குதான்.. நொறுங்கிய மம்தாவின் கனவு!
பஞ்சிம்: 5 மாநில சட்டசபை தேர்தல் மூலம் தேசிய அரசியலில் குறிப்பிட்ட இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்த மேற்கு வாங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் முடிவுகள் பின்னடைவை கொடுத்துள்ளது.
5 மாநில சட்டசபை முடிவுகள் வந்துள்ளன. தேர்தலில் எதிர்பார்ப்புகளை விஞ்சி பாஜக மொத்தமாக 4 மாநிலங்களில் கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றுள்ளது.
கோவாவில் கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப்பில் பெரும்பான்மை என்று பாஜக இந்த தேர்தலை.. வாழை இலையில் போட்ட செட்டிநாடு விருந்து போல மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிட்டது!

மம்தா
இந்த சட்டசபை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நபர் என்றால் அது மம்தா பானர்ஜிதான். ஏனென்றால் மேற்கு வாங்க சட்டசபை தேர்தலுக்கு பின் இவர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. தேசிய அரசியலில் கால் வைப்பதற்கான ஆசையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை இவரே வெளிப்படுத்தினார். இதை முன்னிட்டே சிறிய மாநிலமான கோவாவில் இவர் நேரடியாக கூட்டணி அமைத்து களமிறங்கினார்.

கோவா தேர்தல்
மஹுவா மைத்ரா தலைமையில் இவரின் கட்சி கோவாவில் போட்டியிட்டது. அங்கு மகாராஷ்டிராவாடி கோமண்டாக் கட்சியுடன் கூட்டணி வைத்து திரிணாமுல் தேர்தலை சந்தித்தது. அந்த கட்சி கோவாவில் இரண்டு இடங்களை வென்றது. ஆனால் அதே கூட்டணியில் இடம்பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்துள்ளது. கோவா தேர்தலை தேசிய அரசியலில் நுழைவதற்கான சோதனை முயற்சியாக திரிணாமுல் பார்த்தது.

சோதனை முயற்சி
இந்த தேர்தலில் 1 இடத்தில் வென்று இருந்தால் கூட அது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அரசியல் பாதையை தேசிய அளவில் போட்டுக்கொடுத்து இருக்கும். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் இங்கு மோசமாக தோல்வி அடைந்ததோடு எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் பிரித்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவையும் தனியாக போட்டியிட்டன. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் எல்லாம் பிரிந்து அது பாஜகவிற்கு சாதகமாக முடிந்தது.

மம்தா
காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்ற மம்தாவின் பிடிவாதம் பாஜகவிற்கு ஆதரவாக முடிந்துள்ளது. அங்கு வாக்குகளை பிரித்ததை தவிர திரிணாமுல் காங்கிரஸ் பெரிதாக எதுவும் செய்யவில்லை. சரி கோவா வேறு மூலையில் இருக்கிறது மம்தா அங்கே கால் வைக்க சிரமப்படுகிறார் என்று எடுத்தாலும் கூட ஆம் ஆத்மி இங்கே இரண்டு இடங்களை வென்றுள்ளது. அதோடு மம்தா ஆதரவு அளித்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும் உத்தர பிரதேசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தில் மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக நேரடியாக பிரச்சாரம் செய்தார். அங்கும் சமாஜ்வாதி கூட்டணி 125 இடங்களை மட்டுமே வென்று எதிர்கட்சியாகி உள்ளது. மொத்தத்தில் 5 மாநில தேர்தலில் மம்தாவால் பெரிய அளவில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கோவாவில் கிங் மேக்கர் ஆவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட மம்தாவின் டிஎம்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

முடியவில்லை
இது தேசிய அரசியல் அவர் காலடி வைப்பதற்கான மிகப்பெரிய ஸ்பீட் பிரேக்கராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இது வேகத்தடை தானே ஒழிய டெட் எண்ட் கிடையாது. கண்டிப்பாக இந்த தேர்தல் பிற மாநில அரசியல் கொள்கைகள், மக்கள் விருப்பங்கள் குறித்த தெளிவை மமதாவிற்கு கொடுத்து இருக்கும். தேசிய அரசியலில் அவருக்கு இந்த 5 மாநில தேர்தல் கண்டிப்பாக பாடமாக அமைந்து இருக்கும். அதோடு காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட மற்ற எதிர்கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் உணர்ந்து இருப்பார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications