For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜவுக்காக சண்டை போட்டு கொள்ளும் திரிணாமுல்-கோவா பார்வர்ட் கட்சி.. கோவாவில் களைகட்டும் தேர்தல்!

Google Oneindia Tamil News

பனாஜி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் சிறிய மாநிலமான கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இங்கு ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த முறை ஆட்சி கைக்கு வந்தும் விட்டதுபோல் இந்த முறை இருக்க கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

உள்ளூரை சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.. உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு உள்ளூரை சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.. உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு

 வார்த்தை போர்

வார்த்தை போர்

இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகியவை போட்டி அளிக்க காத்திருக்கின்றன. கோவா ஃபார்வர்டு கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இரு கட்சிகளும் கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன, ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து இரு கட்சிகளும் ஒருவரையொருவர் தாக்கி வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளது.

 பாஜகவுக்கு உதவி செய்கிறது

பாஜகவுக்கு உதவி செய்கிறது

கோவா பார்வர்ட் கட்சியின் விஜய் சர்தேசாய்க்கு எதிராக ஃபடோர்டா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் அதன் மிக முக்கியமான தலைவரான முன்னாள் மாநில முதல்வர் லூசினோ ஃபலேரோவை நிறுத்தியது.இந்த நிலையில் லூசினோ ஃபலேரோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் கோவா பார்வர்ட் கட்சி பாஜகவுக்கு தொடர்ந்து உதவி செய்கிறது என்று திரிணாமுல் எம்பி மொஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களை ஏமாற்ற முடியாது

மக்களை ஏமாற்ற முடியாது

இது தொடர்பாக அவர் கூறுகையில், ' இங்கே யார் மதச்சார்பற்ற வாக்கு? சர்தேசாய் இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜகவில் சேரப் போனார். மக்கள் இதை ஒரு முறை பார்த்திருக்கிறார்கள். அதே மக்களை இரண்டு முறை ஏமாற்ற முடியுமா? போய் பாஜகவில் சேர்ந்து ஐந்தாண்டுகள் அதன் பலனை அனுபவித்தார்' என்று கூறியுள்ளார். இதேபோல் வேட்புமனுவை வாபஸ் பெற்று தனது உறவினரை அங்கு நிற்க கூறிய லூசினோ ஃபலேரோவையும் அவர் தாக்கினர்.

திரிணாமூல் நடத்திய நாடகம்

திரிணாமூல் நடத்திய நாடகம்

இதேபோல் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிக்க பாஜகவுக்கு உதவுவதாக திரிணாமுல் கட்சிக்கு விஜய் சர்தேசாய் பதிலடி கொடுத்துள்ளார். ''ஃபடோர்டா தொகுதியில் திரினாமுல் நடத்திய நாடகம் அந்த கட்சியை முழுவதுமாக அம்பலடுத்தி உள்ளது. ஏனெனில் அது பாஜக அல்லாத வாக்குகளைப் பிரித்து பிஜேபிக்கு நன்மை பயக்கும்'' என்று அவர் கூறியுள்ளார். 2017 சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு கோவா ஃபார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் முக்கிய காரணமாக இருந்தார், ஏனெனில் அங்கு எந்த ஒரு கட்சிக்கும் அரசை அமைப்பதற்கான 21 இடங்கள் கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு 17, பாஜகவுக்கு 13 என்ற நிலையில் சர்தேசாய் தனது இரண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
There is a sharp clash between the Goa Forward Party and the Trinamool Congress in In Goa Both parties are engaged in a war of words attacking each other
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X