பழைய கார், பைக் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி உண்டா? குழப்பத்தை தீர்த்தது வருவாய்துறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பழைய கார் மற்றும் நகைகள் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்டா, இல்லையா என்பதை அந்த வரி அமலாகும் முன்பு தெளிவுபடுத்தவில்லை.இப்போது அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பழைய கார்கள், நகைகளை வாங்குவோருக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்துமா என்பதில் சந்தேகம் இருந்தது. இதுகுறித்து வருவாய் துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:

தனிநபர் ஒருவர், தனது பழைய நகைகளை கடைகளில் விற்கும் போது, ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை.

விளக்கம்

விளக்கம்

அதே நேரம், ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத அதேநேரம், வர்த்தக நோக்கில் வழங்குவோரிடமிருந்து பழைய நகைகளை, ஜிஎஸ்டியில் பதிவு செய்த கடைக்காரர்கள் வாங்கும் போது, 3 சதவீத வரி வசூலிக்க வேண்டும். எனினும், இந்த வரித் தொகையை, புதிய நகைகளுக்கு செலுத்தும் வரியில், உள்ளீட்டு வரி ஆதாயப் பிரிவின் கீழ் கழித்துக் கொள்ளலாம்.

மார்க்கெட் பாதிப்பு

மார்க்கெட் பாதிப்பு

பழைய கார்கள் மீது 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தநிலையில், ஜிஎஸ்டி.,யின் அடிப்படையில் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், பழைய கார் மார்க்கெட்டில் பலத்த அடி விழும் நிலை ஏற்பட்டது.

வரி தேவையில்லை

வரி தேவையில்லை

இந்த நிலையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய கார், பைக்குகளை விற்பனை செய்யும் தனி நபர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கம்

வர்த்தக நோக்கம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டத்தின் 9[4] பிரிவின் கீழ் பழைய கார் மற்றும் பைக்குகளை விற்பனை செய்யும் தனிநபர்கள் தொழில்முறை வர்த்தகமாக தங்களது வாகனத்தை விற்கவில்லை. தங்களது சுய தேவையின் அடிப்படையில் விற்பனை செய்வதாக கருத முடியும். அவ்வாறு, தனி நபர் விற்பனை செய்யும் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

சிறு வரி

சிறு வரி

அதேநேரத்தில், ரிவர்ஸ் சார்ஜ் விதிகளின் அடிப்படையில், பழைய கார்களை வாங்கி விற்கும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று ஆதியா கூறி இருக்கிறார். இதனால், பழைய கார் விற்பனை செய்வோர் மத்தியில் இருந்த குழப்பம் சற்றே நீங்கி இருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Central Government implemented the Goods and Service Tax (GST) from July 1, 2017, in India. With automobiles attracting the highest GST of 28 percent plus cess based on body type and engine capacity.
Please Wait while comments are loading...