நாகா இனத்தவருக்கு தனி பாஸ்போர்ட், கொடிக்கு மத்திய அரசு ஒப்புதல்? மீண்டும் சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நாகா இனத்தவருக்கு தனி பாஸ்போர்ட், மற்றும் கொடிக்கு ஒப்புதல் தெரிவித்து அகன்ற நாகாலாந்து நாடு கோரி போராடும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (என்.எஸ்.சி.என் ஐசக்-மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டதாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தைகளின் போது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (என்.எஸ்.சி.என் ஐசக்-மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

மத்திய அரசு மறுப்பு

மத்திய அரசு மறுப்பு

அந்த ஒப்பந்தத்தில் நாகா இனமக்கள் தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் தனியே கொடி வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டதாக கூறப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இதை மறுத்தது.

மீண்டும் சர்ச்சை

இந்த நிலையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்பு இன்று மீண்டும், தங்களுக்கு தனி பாஸ்போர்ட், கொடிக்கு இந்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

தனிநாடு கோரிக்கை

தனிநாடு கோரிக்கை

நாகா இனமக்கள் நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் வசிக்கின்றனர். நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற தனி நாகாலாந்து நாடு அமைக்க வேண்டும் என்பதுதான் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் கொள்கை.

கப்லாங்

கப்லாங்

இதன் கப்லாங் பிரிவுதான் கடந்த ஆண்டு மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதனையடுத்துதான் மணிப்பூரிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களை அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கப்லாங்

கப்லாங்

இதன் கப்லாங் பிரிவுதான் கடந்த ஆண்டு மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதனையடுத்துதான் மியான்மருக்குள் எல்லைதாண்டி நுழைந்து தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NSCN-IM claimed that the Govt of India approved a separate national flag and passport for Nagas.
Please Wait while comments are loading...