For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்காளத்தில் மீண்டும் பரபரப்பு... பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டு வீச்சு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க.வினரின் வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டது.

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குபதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதில், 303 இடங்களை பெற்று தனி பெரும்பான்மையாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அசத்தி இருக்கிறது பாஜக .

Grenade bombing In BJP Victory Rally

கடந்த 2014 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் எவருக்கும் காயமில்லை. திரினாமுல் காங்கிரஸ் கட்சியினர் கையெறி குண்டு வீசியதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி

இதற்கு முன், கொல்கத்தாவில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பேரணியில், கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால், ஏற்பட்ட பெரும் பதற்றத்தால், ஒரு நாளுக்கு முன்பாகவே பிரச்சாரம் ஓய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal: Grenade bombing range in BJP Victory Rally
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X