இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி! குடியரசு தலைவர், பிரதமர் இணைந்து அறிமுகம் செய்தனர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுக விழா கோலாகலமாக டெல்லியில் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

-சரியாக 12 மணி 1 நிமிடத்திற்கு ஜிஎஸ்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

-நள்ளிரவு 12 மணிக்கு உரையை நிறைவு செய்தார் பிரணாப் முகர்ஜி

-குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி இணைந்து ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தனர்

-இரு தலைவர்களும் இணைந்து பொத்தானை அழுத்தி ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தனர்

-கூட்டு கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த குறும்படம் காட்டப்பட்டது

-ஜிஎஸ்டி குறித்த வீடியோவுடன் அறிமுக விழா நிறைவடைந்தது

-ஜிஎஸ்டிக்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய நான் அனுமதித்ததை பெருமையாக கருதுகிறேன்

-மத்திய-மாநில அரசுகளின் கூட்டாட்சி தத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது ஜிஎஸ்டி-பிரணாப்

-ஜிஎஸ்டி வரியால் இறக்குமதி, ஏற்றுமதி துறைகள் வளர்ச்சி பெறும்- பிரணாப்

-2002ம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து ஜிஎஸ்டி உருவாக்கப்பட்டது

-நான் நிதி அமைச்சராக இருந்தபோது ஜிஎஸ்டி உருவாக்கத்திற்கு பங்காற்றியுள்ளேன்-பிரணாப்

-ஜிஎஸ்டி அறிமுக விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேச்சு

-ஜிஎஸ்டி வரி விதிப்பால் முதலீட்டாளர்களின் குழப்பங்கள் தீரும்

-வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஜிஎஸ்டி உதவும்

-ஊழல்களை ஒழிக்க ஜிஎஸ்டி உதவும்

-அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து வணிகர்கள் தப்பிக்க முடியும்-மோடி பேச்சு

-ஜிஎஸ்டி அறிமுகவிழாவில் பிரதமர் மோடியின் பேச்சு நிறைவடைந்தது

-ஜிஎஸ்டி என்பது பகவத் கீதை போன்றது-மோடி

-கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளன

-ஜிஎஸ்டி தொடர்பாக 18 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம்-மோடி

-பல்வேறு மாகாணங்களை இணைத்து ஒரே இந்தியாவாக மாற்றினார் சர்தார் வல்லபாய் பட்டேல்

-ஜிஎஸ்டி வரி விதிப்பும் இந்தியாவை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்துள்ளது

-காஷ்மீர் முதல் லட்சதீவு வரை இப்போது ஒரே வரிதான்-மோடி

-மாநிலத்திற்கு மாநிலம் இனிமேல் வரி மாறுபடாது-மோடி

-பல ஆண்டுகாலமாக ஆலோசித்து உருவாக்கப்பட்டதே ஜிஎஸ்டி வரி: மோடி

-கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஜிஎஸ்டி: மோடி

-ஜிஎஸ்டி வரி விதிப்பு எந்த ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ உரித்தானது கிடையாது-மோடி

-ஜிஎஸ்டி அமலாக உள்ளதற்கு கூட்டு முயற்சியே காரணம்-மோடி புகழாரம்

-இந்தியாவின் வருங்காலத்திற்கு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது-மோடி

-ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காட்டுகிறது-மோடி

-இன்று நள்ளிரவில் இந்தியாவின் வருங்காலத்தை நாம் தீர்மானிக்க உள்ளோம்-மோடி

-ஜிஎஸ்டி அறிமுக நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரை

-வருகை தந்தவர்களை வரவேற்று மோடி பேச்சு

-இந்தியா புதிய விதியை எழுதிக்கொண்டிருக்கிறது: அருண் ஜேட்லி பேச்சு

-ஜிஎஸ்டி வரியால் மாநில அரசு அல்லது மத்திய அரசின் மதிப்பு குறையவில்லை

-இரு வகை அரசுகளும் இணைந்து வரியை நிர்ணயம் செய்கின்றன- ஜேட்லி

-ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேசம்- ஜேட்லி

-மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறிக்கோளை எட்டியுள்ளன

-இந்தியாவில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது-ஜேட்லிநாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

-ஜிஎஸ்டி அறிமுக நிகழ்வுக்கு வந்தவர்களை வரவேற்று பேசுகிறார் ஜேட்லி

GST inaugural function begins

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST launching is being held in the Parliament campus as the President, PM and other leaders are attending the same.
Please Wait while comments are loading...