For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நொறுங்கிய பிளான்! இலவசத்தை எதிர்த்துவிட்டு.. இலவச வாக்குறுதிகள் மூலமே குஜராத்தை வென்ற பாஜக! ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

காந்தி நகர்: தேசிய அளவில் இலவசங்களுக்கு எதிராக தீவிரமாக களமாடிக்கொண்டு இருக்கும் பாஜக அதே இலவசங்களை வைத்து குஜராத்தில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை வழங்குவதை பாஜக தலைவர்கள் பலர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இலவசங்கள் மூலம் மக்கள் பல அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொண்ட நிலையிலும் கூட பாஜக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்க கூடாது. இலவசங்களை வழங்கும் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜகவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்?பாஜக, காங்கிரஸில் கவனம் பெறும் 5 தொகுதிகள்! நிலவரம் என்ன? இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்?பாஜக, காங்கிரஸில் கவனம் பெறும் 5 தொகுதிகள்! நிலவரம் என்ன?

வழக்கு

வழக்கு

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனுதாரராக சேர்த்துக்கொண்டது. இலவசங்கள் காரணமாக மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும். இதற்கு பொருளாதார ரீதியாக சான்றுகள் உள்ளன, என்று திமுக தரப்பு இந்த வழக்கில் வாதம் வைத்து வருகிறது. அதே சமயம் இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுப்பதை பாஜகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இலவசங்கள் காரணமாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிபெறும் நிலையில்தான் பாஜக இந்த வழக்கை தொடுத்தது.

இலவசங்கள்

இலவசங்கள்

இலவசங்கள் மூலம் குஜராத்திலும் ஆம் ஆத்மி வென்றுவிடும் என்ற அச்சத்தில் பாஜக இந்த வழக்கை தொடுத்ததாக கூறப்பட்டது. அதே சமயம் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பாஜக "Agresar Gujarat Sankalp Patra 2022" என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு, இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது. தமிழ்நாட்டில் பைக் வழங்கும் திட்டத்தை காப்பி அடித்து பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்தது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி இலவசம் கொடுக்கிறது என்று சொல்லிவிட்டு பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதோடு பிரதமரின் மருத்துவ காப்பீட்டில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதற்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பாஜக கூறியது. இதற்கு போட்டியாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் இலவச 100 யுனிட் மின்சாரம், 500 ரூபாய் விலையில் சிலிண்டர்கள், பழைய பென்சன் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. இன்னொரு பக்கம் பாஜக, மதவாத அமைப்புகளை கவனிப்போம், ஸ்லீப்பர் செல்களை ஒடுக்குவோம், மதராஸாக்களை கண்காணிப்போம் போன்ற மதவாத வாக்குறுதிகளையும் கூடுதல் கொடுத்தது.

வாக்குறுதிகள் என்னென்ன

வாக்குறுதிகள் என்னென்ன

பாஜக இலவச வாக்குறுதிகளை மட்டும் கொடுக்காமல் இது போன்ற மதவாத வாக்குறுதிகளையும் கொடுத்தது. இந்த வாக்குறுதிகள் தற்போது பாஜகவிற்கு அங்கு பெரிய அளவில் உதவி உள்ளன. இலவசங்கள் மூலம் எளிதாக வெல்லும் ஆம் ஆத்மியை.. அவர்களின் ஆயுதத்தை வைத்தே பாஜக வீழ்த்தி இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் ஆரம்பத்திலேயே பாஜக அடிச்சு தூக்க தொடங்கி உள்ளது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன. முதல்கட்ட நிலவரங்களின்படி பாஜக 150 இடங்களில் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் 19 இடங்களில் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது. ஆம் ஆத்மி 8 இடங்களில் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது.

English summary
Gujarat Election Results: How did Freebies help BJP to nullify AAP scenario in the state?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X