For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பர்தா அணிந்து மாறுவேடம்.. ஷாகீன் பாக் போராட்டத்தில் புகுந்த குன்ஜா கபூர்.. கையும் களவுமாக சிக்கினார்

டெல்லியில் நடக்கும் ஷாகீன் பாக் போராட்டத்தில், பொய்யாக பர்தா அணிந்து உள்ளே சென்ற பெண் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பர்தா அணிந்து மாறுவேடம்.. ஷாகீன் பாக் போராட்டத்தில் புகுந்த குன்ஜா கபூர்.. கையும் களவுமாக சிக்கினார் - வீடியோ

    டெல்லி: டெல்லியில் நடக்கும் ஷாகீன் பாக் போராட்டத்தில், பொய்யாக பர்தா அணிந்து உள்ளே சென்ற பெண் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அங்கிருந்த பெண்களிடம் கையும் களவுமாக மாட்டிய வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

    டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

    இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    சி.ஏ.ஏ, என்.ஆர்.சி... முழுமையான பாஜக ஆதரவு நிலைப்பாடு.. பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி... முழுமையான பாஜக ஆதரவு நிலைப்பாடு.. பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்

    குலைக்க முயற்சி

    குலைக்க முயற்சி

    இந்த போராட்டத்தை குலைக்க பல அமைப்புகள் முயன்று வருகிறது. ஏற்கனவே கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் இந்த போராட்டம் நடந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையே போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று குன்ஜா கபூர் என்ற பெண், ஷாகீன் போராட்டத்திற்குள் புகுந்து அங்கு கலவரம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பர்தா அணிய முடிவு

    பர்தா அணிய முடிவு

    பர்தா அணிந்து சென்ற குன்ஜா கபூர், அங்கு பெண்களோடு பெண்களாக அமர்ந்து இருக்கிறார். தன்னுடைய உடைக்குள் கேமரா உள்ளிட்ட சில பொருட்களையும் அவர் மறைத்து வைத்துள்ளார். இவரின் நடத்தையை பார்த்து சந்தேகம் அடைந்த பெண்கள் அவரை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அவர் உடலில் கேமரா உள்ளிட்ட பொருட்களை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீஸ்

    போலீஸ்

    இதையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இவர் தான் ஒரு இந்து பெண் என்றும், தன்னுடைய பெயர் குன்ஜா கபூர் என்றும் ஒப்புக்கொண்டார். இவர் தன்னுடைய பெயர் பர்கா என்று பொய் சொல்லிவிட்டு, உள்ளே போராட சென்று இருக்கிறார். இவரை அங்கு போராடும் பெண்கள் விசாரிக்கும் வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

    குன்ஜா கபூர் யார்

    குன்ஜா கபூர் பிரபல யூ டியூப் பக்கங்களை நிர்வகித்து வருகிறார். தீவிரமான வலதுசாரி கொள்கை கொண்டவர் இவர். ரைட் நரேட்டிவ் 'Right Narrative' என்ற யூ டியூப் சேனலை இவர் நடத்தி வருகிறார். இவர் பாஜகவிற்கு ஆதரவாக தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் பெண். பிரதமர் மோடியே, டிவிட்டரில் குன்ஜா கபூரின் பக்கத்தை பின் தொடர்கிறார். பிரதமர் மோடி பின் தொடரும் ஒருவர் இப்படி திருட்டுத்தனமாக செயல்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைத்தளம் எப்படி

    சமூக வலைத்தளம் எப்படி

    சமூக வலைத்தளங்களில் தற்போது பலரும் குன்ஜா கபூரை கிண்டல் செய்து வருகிறார்கள். ஒரு அமைதியான போராட்டத்தை குலைக்க வேண்டும் என்று எப்படி எல்லாம் திட்டம் போடுகிறார்கள். பெண்கள் போராடும் போராட்டத்தை இன்னொரு பெண்ணே இப்படி குலைக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது போன்ற விஷயங்களை உடனே தடுக்க வேண்டும். குன்ஜா கபூருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று, பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

    English summary
    Right-wing activist Gunja Kapoor goes into Shaheen Bagh CAA protest in Burkha: Found by Ladies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X