For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்து சேத விவகாரம்: பான் கிராப்ட்டுக்கு ஒன்று, எங்களுக்கு ஒரு நியாயமா?- சூடான "பஜ்ஜி"

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் பான் கிராப்ட்டுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆஸிக்கு ஒரு நியாயம்! எங்களுக்கு ஒரு நியாயமா?..சூடான 'பஜ்ஜி'- வீடியோ

    மும்பை: பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட்டுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்று கடந்த 2001-ஆம் ஆண்டு சம்பவங்களை நினைவு கூர்ந்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

    கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவான நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டே ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு வசதியாக பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

    Harbhajan Singh angry over ICC for not taking action against Bancroft

    இதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் கேப்டன் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் நீக்கப்பட்டனர். எஞ்சியுள்ள ஆட்டங்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், பான் கிராப்ட் அடுத்த போட்டியில் ஆட தடையில்லை.

    இதற்கு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எதிர்ப்பை அவர் டுவிட்டரில் காட்டியுள்ளார்.

    தனது பதிவில் ஹர்பஜன் சிங் கூறுகையில் வாவ் சர்வதே கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடவடிக்கை ரொம்ப நல்லாயிருக்கு. பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார் என்பதற்கு சிசிடிவி காட்சி ஆதாரம் இருந்த போதிலும் அவருக்கு விளையாடுவதிலிருந்து தடை விதிக்கவில்லை.

    ஆனால் கடந்த 2001-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கங்குலி தலைமையில் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி விளையாடியது. அப்போது போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இதற்காக இந்திய வீரர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சச்சின் மற்றும் ஷேவாக்குக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல் கங்குலி, நான், ஷிவ் சுந்தர் தாஸ், விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தா ஆகியோர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டோம்.

    பந்தை சேதப்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் சச்சின் உள்ளிட்ட நாங்கள் 3 விளையாட்டுகளில் விளையாட தடை விதிக்கப்பட்டோம். ஆனால் பான் கிராப்ட் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்று டுவிட்டரில் ஹர்பஜன் சிங் கொதித்துள்ளார்.

    English summary
    Harbhajan Singh tweets that wow @ICC wow. Great treatment nd FairPlay. No ban for Bancroft with all the evidences whereas 6 of us were banned for excessive appealing in South Africa 2001 without any evidence and Remember Sydney 2008? Not found guilty and banned for 3 matches.different people different rules.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X