ஹர்திக் படேல் விவகாரம்... இருந்தாலும் பாஜகவின் புத்தி இவ்வளவு மோசமாக இருக்கக் கூடாது!
ஹர்திக் படேலிற்கு நேருவின் டிஎன்ஏ அதிகம் இருக்கும் போல என்று தலைப்பிட்டு பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள நேருவின் படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
Recommended Video

டெல்லி: ஹர்திக் படேலும் நேருவைப் போல பெண்களை மயக்குபவர் தான் என்று தலைப்பிட்டு பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் வெளியிட்டுள்ள நேருவின் புகைப்படங்கள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.
குஜராத் தேர்தல் களத்தில் பாஜகவின் வாக்கு வங்கி குறைவதற்கான முக்கிய காரணமாக இருப்பவர் ஹர்திக் படேல். படேல் இன மக்களின் இடஒதுக்கீட்டிற்காக போராடி வரும் ஹர்திக் படேலை எப்படியாவது வளைத்து போட்டு விடலாம் என்று பாஜக திட்டம் போட்டது. ஆனால் அது முடியவில்லை இதனால் தற்போது அவருக்கு எதிரான விமர்சனங்களை திருப்பி விடும் வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது.
பெண் ஒருவருடன் ஹர்திக் படேல் மிக நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஹர்திக் அவருடைய நண்பர்களுடன் மது அருந்துவது போன்ற 4 வீடியோ காட்சிகளும் வெளியாகின. இந்த வீடியோ குறித்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஹர்திக், பாஜக அத்துமீறி தன்னுடைய தனிப்பட்ட விவகாரங்களில் நுழைவதாகக் கூறி இருந்தார்.
|
நேரு படத்தை போட்டு கிண்டல்
இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசிய பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா, ஹர்திக் படேல் அப்படியே பெண்களை மயக்குவதில் நேருவைப் போல இருக்கிறார் என்று கூறி இருந்தார். இவருக்கு ஒரு படி மேலே போய் பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா ஜவஹர்லால் நேரு பெண்களுடன் நெருங்கிப் பேசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ஹர்திக்கிற்கு நேருவின் டிஎன்ஏ இருக்கும் போல என்றும் அவர் தலைப்பிட்டுள்ளார்.

அது அவங்க தங்கச்சிபா?
ஆனால் நேருவின் புகைப்படத்தை போட்டு இந்த தலைப்பிட்ட மால்வியா ஒரு விஷயத்தை கவனிக்கத் தவறி விட்டார் போல. நேருவின் புகைப்படத்தை போட்டவர் அதில் 2 புகைப்படங்களில் அவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியடைவது நேருவின் சகோதரி விஜயலட்சுமி என்பதை பார்க்க வில்லையோ.

மிருனாளினியே புகழ்ந்த போட்டோ
மற்றொரு புகைப்படத்தில் நேருவின் குடும்ப நண்பரும் விடுதலை போராட்ட வீரருமான அம்மு சுவாமிநாதனின் மகள் மிருனாளினி சாராபாய்(விக்ரம் சாராபாயின் மனைவி) மனுஷ்யா நடனம் ஆடியதற்காக பாராட்டிய போது எடுத்த புகைப்படம். கதகளி அங்கீகரிக்கப்படாத அந்த காலகட்டத்திலேயே நேரு தன்னுடைய நிகழ்ச்சிக்கு வந்து பாராட்டியதாக மிருனாளினியே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

சர்ச்சையை ஏற்படுத்தும் டுவீட்
ஜவஹர்லால் நேருவின் புகைப்படங்களை ஹர்திக் படேலுடன் ஒப்பிட்டு போடப்பட்டுள்ள இந்த டுவீட் தேசிய கட்சியான பாஜகவிற்கு அழகா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் பாஜக வாக்கிற்காக இந்த அளவிற்கு மோசமாகவா செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் கேட்கத் தோன்றுகிறது. அமித் மால்வியாவின் இந்த டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications