அதிரடி திருப்பம்.. பாஜக பெண் நிர்வாகி மரணம் கொலை வழக்காக மாற்றம்.. உணவில் விஷமா? தீவிர விசாரணை
பானஜி: டிக்டாக் பிரபலமும் ஹரியானா பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்து உள்ளார். பாஜகவின் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
2019ல் ஆண்டு நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியடைந்தார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இவர் சில டிவி தொடர்களிலும் நடித்தார்.

பாஜக தலைவர் சோனாலி போகத்
தொடர்ந்து பாஜகவில் செயல்பட்டு வந்த அவர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோக்கள் பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இந்நிலையில் தான் 2019 சட்டசபை தேர்தலில்ஹரியானா மாநிலம் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் சோனாலி போகத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் குல்தீப் பிஷ்னோய் போட்டியிட்டார். இந்த தேர்தலில் சோனாலி போகத் தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து பாஜக கட்சியில் செயல்பட்டு வந்தார்.

கோவாவில் மாரடைப்பு
இந்நிலையில் தான் அதாம்பூர் தொகுதி எம்எல்ஏவான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் ஆதாம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் சோனாலி போகத் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கோவாவுக்கு சென்ற சோனாலி போகத்துக்கு திங்கட்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் மரணம்
வடக்கு கோவாவில் உள்ள செயின்ட் அந்தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்தார். இந்நிலையில் தான் சோனாலி போகத்தின் இறப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் கூறும்போது, சோனாலி போகத்துக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. அவரது உணவு பழக்கம் வழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனமாக இருப்பார். இதனால் இறப்பில் சந்தேகம் உள்ளது என அவரது சகோதரி கூறினார்.

போலீசில் புகார்
இந்நிலையில் தான் சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு இன்று அஞ்சுனா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அதாவது அவர் இறப்புக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் போனில் பேசினார். இந்த வேளையில் ஏதோ நடப்பதாக அவர் கூறிவிட்டு போனை வைத்த நிலையில் தான் இறந்துள்ளார். இதனால் சந்தேகம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறினர். இந்த புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

உணவில் விஷமா? என விசாரணை
இதையடுத்து இன்று குடும்பத்தினர் ஒப்புதலுடன் அவரது உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சோனாலி போகத் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இதுதொடர்பாக அவரது உதவியாளர் உள்பட 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications