
"அவளும் + அவளும்".. அன்பின் உச்சம் தொட்ட காதல்.. "ஆபரேஷன்" சக்ஸஸாமே.. கடைசியில் தான் ஹைலைட்டே
ஜெய்ப்பூர்: அன்பின் உச்சம், எதையும் செய்ய சொல்லும்போலும்.. ராஜஸ்தானில் ஒரு திருமணம் அப்படித்தான் நடந்துள்ளது.. இந்த திருமணம் குறித்துதான் பலரும் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.
காதலுக்கு பாலின பேதங்கள் கிடையாது இந்த நவீன யுகத்திலும் பல்வேறு தரப்பினருக்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆண் - பெண் காதலுக்கு எப்படி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக, தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் வருகிறது.
இத்தகைய உறவுமுறைகளை நீதிமன்றங்கள் ஏற்றாலும்கூட, ஒரு பொதுச்சமூகம் மிகக் கொடூரமான கண்ணோட்டத்தில்தான் இதை கையாண்டு வருவதை மறுக்க முடியாது.

காதல்ஜோடி
அதேசமயம், இத்தகைய உறவுமுறைகளுக்குள் சிக்கி கொள்ளும் ஜோடிகளுக்கு, சில சமயம் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறது.. சில சமயம், எதிர்பாரா சோகத்தை தந்துவிடுகிறது.. உபியில் சில மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த பெண்ணுக்கு 20 வயதாகிறது.. ஒரு கல்லூரியில் பிஏ படித்து வந்தார்... சக மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்தார்.. அந்த பெண்ணும் இவரை காதலித்தார்.. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, வீட்டில் போய் தங்கள் முடிவுகளை சொன்னார்கள்..

கர்ப்பப்பை
வழக்கம்போல் எதிர்ப்பு கிளம்பியது.. இதையடுத்து, அந்த பெண் தன்னை ஆணாக மாற்றி கொள்ள முடிவெடுத்தார்.. நேராக ஸ்வரூப்ராணி நேரு மருத்துவமனைக்கு சென்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய கேட்டுக் கொண்டார்.. அதன்படியே, முதலில் அந்த பெண்ணின் உடலின் மேல்புறத்தில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.. அடுத்ததாக, அவருடைய உடலில் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது... அடுத்து, பிறப்புறுப்பை மாற்றுவதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.. இப்படியெல்லாம் ஆபரேஷன்கள் ஒவ்வொன்றும் சரியாக முடிந்துவிட்டால், கடைசியில் அந்த பெண்ணுக்கு, மீசை, தாடி வந்துவிடுமாம்..

ஆபரேஷன் சக்ஸஸ்
அப்படித்தான் இப்போதும் ஒரு ஆபரேஷன் சக்சஸாக முடிந்துள்ளது.. ராஜஸ்தானை சேர்ந்த கபடி டீச்சர் அந்த பெண்.. அவர் பெயர் மீரா.. இவரிடம் படித்து வந்த மாணவி பெயர் கல்பனா.. ஒருகட்டத்தில் கல்பனாவை உயிருக்கு உயிராக விரும்பினார் மீரா.. அதேபோல, கல்பனாவும் மீரா டீச்சரை விரும்பினார்.. இறுதியில், கல்பனாவை திருமணம் செய்ய மீரா முடிவு செய்து, அதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கும் தயாரானார்.. ஆபரேஷனும் நல்லவிதமாக முடிந்து, கல்பனாவையும் கரம் பிடித்துவிட்டார்.. இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்த ஆபரேஷனுக்கும், கல்யாணத்துக்கும் இரு வீட்டிலுமே மனப்பூர்வமான சம்மதத்தை தந்துள்ளார்கள்..

கலக்கல் கல்பனா
ஆனால், ஆரம்பத்தில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.. ஆபரேஷன் செய்து கொள்வதாக சொல்லவும்தான் கல்பனா வீட்டில் சம்மதித்துள்ளனர்.. மீராவுக்கு இப்போது புது பெயர் 'ஆரவ் குந்தல்' என மாற்றி கொண்டார்.. கடந்த 2016-ல் இருந்து மீராவுக்கும், கல்பனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. 2 வருடங்கள் நல்ல முறையில் பழகி, புரிதலை ஏற்படுத்தி கொண்டார்கள்.. 2018-ல் தன் காதலை மீரா சொல்லவும், கல்பனாவும் ஓகே சொல்லி உள்ளார்.. இப்போது இந்த புதுமண தம்பதி மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை தொடங்கி உள்ளனர்..

ஹார்மோன் ஊசி
இதேபோல நம்ம மதுரையிலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. ஆனால், அது துயரம் நிறைந்தது... சோகம் தழுவியது... தோழிகள் 2 பேரும் உருகி உருகி காதலித்தனர்.. கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.. அதற்காக, ஆணாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் அந்த பெண் செய்துகொண்டார்.. மதுரை ராஜாஜி மருத்துவமனையில்தான் ஆபரேஷன் நடந்தது.. ஆண் தன்மையை அடைவதற்காக மரபணு அதாவது ஹார்மோன் ஊசியையும் செலுத்தி கொண்டு வந்தார் அந்த பெண். பிறகு பெயரையும் மாற்றி கொண்டார்.. கல்யாணமும் செய்து கொண்டனர்.. ஒருவீடு எடுத்து ஒன்றாகவும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர்..

ஃபெயிலியர்
விஷயம் தெரிந்து, பெற்றோர் ஆவேசமாக கிளம்பி வந்தார்கள்.. திருப்பரங்குன்றம் ஸ்டேஷன் வரை விஷயத்தை கொண்டு போனார்கள்.. மகளை எப்படி எப்படியோ சமாதானப்படுத்தினர்.. கண்ணீர் விட்டு கதறி பதறி அழுதனர்.. கடைசியில் அந்த பெண் மனம் மாறினார்.. "ஆணாக மாறிய தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை" என்று எழுதி கொடுத்து விட்டு, பெற்றோருடன் கூலாக கிளம்பி சென்றுவிட்டார்.. இப்படி ஒரு பெண்ணை நம்பி, தூய்மையான காதலுக்காக, தன் உடம்பையே மாற்றி கொண்டு, ஆபரேஷனும் செய்த நிலையில், யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாய் கண்ணீருடன் தழும்பி நிற்கிறார் அந்த பரிதாப பெண்.... ஆக மொத்தம், எதையும் செய்யும் போல இந்த "காதல்"