For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் வெளுத்த கனமழை- ஆறுகளாக மாறிய சாலைகள்-- நைனிடால் துண்டிப்பு- 16 பேர் பலி

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலாத்தலமான நைனிடால் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இம்மாநிலத்தின் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இம்மாநிலத்தின் சுற்றுலாதலங்களான நைனிடாலில் மேகவெடிப்பு காரணமாக பெருமழை கொட்டியது.

5000 கோடிக்கு அக்ரிமென்ட்.. மின்சார கொள்முதலில் ஊழல்.. ஆவணங்களை வெளியிடுவேன்.. அண்ணாமலை எச்சரிக்கை5000 கோடிக்கு அக்ரிமென்ட்.. மின்சார கொள்முதலில் ஊழல்.. ஆவணங்களை வெளியிடுவேன்.. அண்ணாமலை எச்சரிக்கை

துண்டிக்கப்பட்ட நைனிடால்

துண்டிக்கப்பட்ட நைனிடால்

இந்த கனமழையால் நைனிடால் செல்லும் சாலைகள் அனைத்தும் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து நைனிடால் சுற்றுலாத்தலம் தற்போது துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. நைனிடால் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் சாலைகள் அனைத்தும் காட்டாறுகள் பாயும் இடங்களாக உருமாறிவிட்டன. நைனிடாலில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

Recommended Video

    விடாது வெளுத்து வாங்கும் கனமழை… உத்தரகாண்ட்டில் ரெட்அலெர்ட்… பத்ரிநாத் யாத்திரை நிறுத்தம்
    மீட்பு பணிகள் மும்முரம்

    மீட்பு பணிகள் மும்முரம்

    இதையடுத்து 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. உத்தர்காசியில் 2 குழுக்களும் டேராடூன், சமோலி, அல்மோரா, ஹரித்வார், காதர்பூர் ஆகிய இடங்களில் தலா ஒரு குழுவினரும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மத்திய அமைச்சர் அஜய் பட், உத்தரகாண்ட் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    கனமழை எச்சரிக்கை

    கனமழை எச்சரிக்கை

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றும் கனமழை கொட்டும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று காலை 8.30 மணியுடனான 24 மணிநேரத்தில் பந்த்நகரில் 40 செ.மீ மழை பதிவாகி உள்ளது. முக்தேஸ்வரில் 34 செ.மீ, தெஹ்ரியில் 7 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தங்களது பயணத்தை தொடர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வைரல் வீடியோக்கள்

    வைரல் வீடியோக்கள்

    இதனிடையே உத்தரகாண்ட் மீட்பு பணிகளில் உயிரையும் பொருட்படுத்தாமல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதலங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பத்ரிநாத் நெஞ்சாலையில் காட்டாறாக ஓடும் வெள்ள நீரில் சிக்கிய கார் ஒன்றை எல்லை சாலைகள் சீரமைப்பினர் மீட்கும் வீடியோ ஒன்றும் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. அதேபோல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் சிக்கிய யானை ஒன்று உயிர் தப்பும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குஜராத் முதல்வர் உதவிக் கரம்

    குஜராத் முதல்வர் உதவிக் கரம்

    மேலும் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார். உத்தரகாண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி இருக்கும் குஜராத் யாத்ரிகர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். மேலும் உத்தரகாண்ட் மாநில அரசுக்கு மீட்பு பணிகளுக்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் குஜராத் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

    English summary
    16 more deaths were reported in Uttarakhand on Tuesday rains continued to lash the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X