For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று பள்ளத்திற்குள் கவிழ்ந்து 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள சிர்மோர் மாவட்டத்தின் ரேனுகாஜில் இருந்து உசாதிகார் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. தடாப்ரோக் பகுதியில் வந்த போது 550 அடி பள்ளத்திற்குள் விழுந்தது.

Sirmaur: People gather near an accident site after a bus rolled down a 600-feet deep gorge near Ransua-Jabrog village in Sirmaur district

இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர் என்று மாவட்ட டி.எஸ்.பி. ராம் தெரிவித்துள்ளார். 15 பேர் சம்பவ இடத்திலும், 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் பலியாகினர் என்று ராம் தெரிவித்துள்ளார்.

பலியானவர்கள் அனைவரும் அந்தாரி, ஹரிபூர் தார் மற்றும் உசாதிகார் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஹிமாச்சல் மாநில கவர்னர் ஊர்மிளா சிங், முதல்வர் வீரபத்ர சிங், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.எஸ்.பாலி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Twenty people were killed and another critically injured when a bus rolled down a 600-feet deep gorge near Ransua-Jabrog village in Sirmaur district this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X