இமாச்சல பிரதேசம்: உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தில் கிராமவாசியை மீட்ட மீட்பு படையினர்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. அங்கு சிக்கி தவித்த கிராமவாசியை உயிரை பணயம் வைத்து மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மலைப்பகுதி மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

Himachal Pradesh: disaster rescue team carried a man in Jahalman nallah

அப்படித்தான் இமாச்சல பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டியின் திண்டி என்ற பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு உடல் நலம் பாதித்த நிலையில் தவித்து வந்த கிராமவாசியை பேரிடர் மீட்பு படையினர் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டனர்.

பாலம் உடைந்து தண்ணீர் பயங்கரமாக ஒடிக்கொண்டிருந்த ஆற்றின் நடுவே இரும்பு ஏணிகளை போட்டு, உயிரை பணயம் வைத்து கிராமவாசியை மெதுவாக தூக்கி வந்தனர். கொஞ்சம் சரிந்தாலும் அத்தனை பேரும் ஆற்றில் சிக்கி இறந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு ஆக்ரோசமாக வெள்ளம் பாயும் அந்த இடத்தில் உயிரை துச்சமென மதித்து கிராமவாசியை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+