போச்சே.. நூலிழையில் 8 தொகுதியில் தோற்ற பாஜக..இமாச்சலில் மாறிப்போன ரிசல்ட்.. ‛கை’க்கு அதிர்ஷ்டம்!
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 60 ஓட்டு வித்தியாசம் உள்பட நூலிழையில் 8 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளனர். இது சரியாக நடந்திருந்தால் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து இருக்கலாமே எனக்கூறி பாஜக தலைவர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் ஆட்சியை பிடிப்பது யார்? என்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவும் என கூறப்பட்டது.

இமாச்சலில் ஆட்சியை இழந்த பாஜக
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற வேண்டிய சூழலில் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. இங்கு மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. 3 சுயேச்சைகள் வெற்றி பெற்ற நிலையில் ஆம்ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தொடரும் 37 ஆண்டு டிரெண்ட்
கடந்த 1985ம் ஆண்டு முதல் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தொடர்ந்து அடுத்த முறை ஆட்சி அமைப்பது இல்லை. இது தற்போதும் நடந்துள்ளது. இதன்மூலம் கடந்த 37 ஆண்டுகளாக இந்த டிரெண்ட் என்பது தொடர்ந்து வருகிறது. இருப்பினும் இந்த ஆட்சி மாற்றம் உண்மையில் பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால் இமாச்சல பிரதேசம் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் சொந்த மாநிலங்களாகும். மேலும் இமாச்சலில் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருவரும் வியூகம் வகுத்து செயல்பட்ட நிலையில் தற்போது பாஜக தோல்வியடைந்துள்ளது.

குறைந்த ஓட்டில் 8 காங்கிரஸார் வெற்றி
இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக, காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பாஜகவினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அதாவது இமாச்சல பிரதேசத்தில் 60 ஓட்டு முதல் 1000 ஓட்டுக்குள்ளான வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 வேட்பாளர்களும், 1000 முதல் 2000 ஓட்டுக்குள்ளான வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி போரான்ஜி தொகுதியில் 60 ஓட்டு வித்தியாசத்திலும், சுஜான்பூர் தொகுதியில் 399 ஓட்டு வித்தியாசத்திலும், ராம்பூர் தொகுதியில் 567 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும், ஸ்ரீரேனுகாஜி தொகுதியில் 860 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் காங்கிரஸஅ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் பாடியாத், லாஹால்-ஸ்பிட்டி மற்றும் நாகன் ஆகிய 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 1000 முதல் 2 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர்.

வருத்தத்தில் பாஜகவினர்
இந்த 8 தொகுதிகளில் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துள்ளதால் அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களும், கட்சி மேலிட தலைவர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த 8 தொகுதிகளில் பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர்களின் வெற்றி தொகுதி 33 ஆக அதிகரித்து இருக்கும். மேலும் பாஜகவில் இருந்து வெளியேறிய 2 பேர் சுயேச்சைகளாக வெற்றி பெற்ற நிலையில் அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது பாஜகவுக்கு அந்த நிலை முற்றிலுமாக இல்லை.

பாஜகவின் 7 பேர் நூலிழையில் வெற்றி
இது ஒருபுறம் இருக்க பாஜகவின் 7 வேட்பாளர்களும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அதன்படி ஸ்ரீநயினா தேவிஜி தொகுதியில் 171 ஓட்டு வித்தியாசத்திலும், பிலாஷ்பூர் தொகுதியில் 276 ஓட்டு வித்தியாசத்திலும், டாரங் தொகுதியில் 618 ஓட்டு வித்தியாசத்திலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் பால்க், உன்னா, ஜாஸ்வான்-பிக்பூர் மற்றும் சர்கா காட் ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 1000 முதல் 2 ஆயிரம் ஓட்டுக்குள்ளான வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியினரை தோற்கடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரி ஓட்டு பாஜகவுக்கு அதிகம்
மேலும் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களும், 2ம் இடம் பிடித்த பாஜகவின் வேட்பாளர்களுக்கும் இடையேயான சராசரி ஓட்டு வித்தியாசம் என்பது 5,784 என்ற அளவில் உள்ளது. இது பாஜகவின் வெற்றி வித்தியாசத்தை காட்டிலும் குறைவாகும். ஏனென்றால் பாஜக வெற்றி பெற்ற 25 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள், 2ம் இடம் பிடித்த வேட்பாளர்களை வீழ்த்தியன் சராசரி ஓட்டு 6,575 என்ற அளவில் உள்ளது.

37 ஆயிரத்து 974 ஓட்டுகள் வித்தியாசம்
மேலும் இமாஇமாச்சல பிரதேச மாநில என்பது மிகவும் சிறிய மாநிலமாகும். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 ஆக தான் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஓட்டும் வேட்பாளர்களுக்கு மிகவும் முக்கியமாகும். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளில் காங்கிரஸ் கட்சி 18 லட்சத்து 52 ஆயிரத்து 504 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இது 43.9 சதவீதமாகும். அதேவேளையில் பாஜக 18 லட்சத்து 14 ஆயிரத்து 530 ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது 43 சதவீதமாகும். இருகட்சிக்கு இடையேயான ஓட்டு சதவீதம் 0.9 என்ற அளவில் தான் உள்ளது. அதாவது இமாச்சலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி வெறும் 37 ஆயிரத்து 974 ஓட்டுக்களை மட்டுமே அதிகம் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான்












Click it and Unblock the Notifications