மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

போபால்: போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகள் 90 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் பலர் வெறும் குளுக்கோஸ் கலந்து உப்பு நீரைத்தான் ரெம்டெசிவிர் மருந்து என நினைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி இருப்பது மருத்துவ அதிசயமாக பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு இந்தியா முழுவதுமே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்தை நேயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

இதனிடையே ரெம்டெசிவிர் மருந்து தான் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவை என நாடு முழுவதும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் அதை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் தவமாய் காத்துக் கிடக்கின்றனர்.

பலருக்கும் செலுத்தப்பட்டது

பலருக்கும் செலுத்தப்பட்டது

இந்த நிலையில், ரெம்டெசிவிர் தட்டுப்பாடை பயன்படுத்தி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல், போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்திருக்கிறது. இது தெரியாமல் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த போலி ரெம்டெசிவிர் செலுத்தப்பட்டிருக்கிறது.

குளுக்கோஸ் உப்பு நீர்

குளுக்கோஸ் உப்பு நீர்

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்த கும்பலை போலீசார் கைது செய்தார்கள் அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் 1,200 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது, காலி பாட்டில்களில் குளுக்கோஸ் உப்பு கலந்த நீர் நிரப்பப்பட்டு ரெம்டெசிவிர் என விற்பனை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.

குணம் அதிகம்

குணம் அதிகம்

இந்தூரில் இந்த போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்ட 10 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆனால் 90 சதவீத நோயாளிகள் உயிர் தப்பியதுடன் குணமடைந்துள்ளனர். இதில் அதிர்ச்சியான இன்னொரு விஷயமும் அங்கு தெரியவந்துள்ளது. உண்மையான ரெம்டெசிவிர் ஊசி போட்டு தப்பித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டபோது, போலி ரெம்டெசிவிர் போட்டு தப்பித்தவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம்பிக்கை காரணம்

நம்பிக்கை காரணம்

இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விநியோகித்த கும்பலை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். உண்மையில் போலி ரெம்டெசிவிர் மருந்து அவர்களை காப்பாற்றியதா என்றால் நிச்சயம் வாய்ப்பு இல்லை. ரெம்டெசிவிர் மருந்து போட்டுவிட்டோம் என்ற நம்பிக்கையே அவர்களை காப்பாற்றியதா சொல்லப்படுகிறது. நம்பிக்கை தான் எல்லாரையும் காப்பாற்றி வருகிறது. உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து அல்ல. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நாளை குறைக்கும். அவ்வளவு தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+