For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அது ஏன் ஆகஸ்ட் 15ல் நமக்கு சுதந்திரம் தந்தார் மெளண்ட் பேட்டன்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேயர்கள் ஆக்ஸ்ட் 15ம் தேதியைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற காரணம் உங்களுக்குத் தெரியுமார்? இதோ அது தொடர்பாக கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு நூல் ஒன்றில் கூறியுள்ள விளக்கம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. அவர் 1947-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி அதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

இந்திய எல்லைகள்...

இந்திய எல்லைகள்...

அது தொடர்பான குறிப்புகளை ஜவஹர்லால் நேருவிடம் அளித்தார் மவுண்ட்பேட்டன் பிரபு. ஆனால், அந்த புதிய திட்டப்படி பஞ்சாப் மற்றும் வங்காளம் இன்றி இந்திய எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் வசம்...

பாகிஸ்தான் வசம்...

இந்த பகுதிகளுடன் பாகிஸ்தானைப் பெற்றுக் கொண்டார் முகமது அலி ஜின்னா. குர்தாஸ்பூரும் பாகிஸ்தான் வசம் இருந்தது.

நேரு அதிர்ச்சி...

நேரு அதிர்ச்சி...

இந்தக் குறிப்புகளைக் கண்டு நேரு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்தார். மேலும், காஷ்மீரையும், பெரோஸ்பூரையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பஞ்சாப்...

பஞ்சாப்...

அதனைத் தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையில் பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் குர்தாஸ்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 15...

ஆகஸ்ட் 15...

ஜூன் 3-ந் தேதி சுதந்திரம் வழங்குவதற்கான இறுதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பத்திரிகையாளர் கூட்டத்தில் சுமார் 300 செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு செய்தியாளர், இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் தேதி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மவுண்ட்பேட்டன் பிரபு, ஆகஸ்ட் 15ம் தேதி என பதிலளித்தார்.

நள்ளிரவில் சுதந்திரம்...

நள்ளிரவில் சுதந்திரம்...

இது குறித்து, லார்ரி கோலின்ஸ் மற்றும் டொமினிக் லபிரே ஆகியோர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்' (பீரிடம் அட் மிட் நைட்) என்ற புத்தகத்தில் மவுண்ட் பேட்டன் கூறுகையில், ‘இந்தியாவுக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் சுதந்திரம் வழங்க நினைத்தேன். அதையடுத்து ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் வழங்க முடிவு செய்தேன்.

மக்கள் விரும்பவில்லை...

மக்கள் விரும்பவில்லை...

ஏனென்றால் அன்றுதான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த 2-ம் ஆண்டு நினைவு நாளாகும். ஆனால், குண்டு வீச்சு தொடர்பான நாளன்று சுதந்திரம் வழங்குவதை கோடிக்கணக்கான இந்துக்கள் விரும்பவில்லை.

அபசகுணம்...

அபசகுணம்...

ஆகஸ்டு 15-ந் தேதி அன்று சுதந்திரம் வழங்குவதாக அறிவித்ததற்கு ஆச்சரியமும், கடும் பீதியும் அடைந்தனர். ஏனெனில் ஆகஸ்டு 15-ந் தேதியை அபசகுண நாளாகவும், ஏளனம் செய்வதாகவும் கருதினர்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்து பஞ்சாங்கப்படி...

இந்து பஞ்சாங்கப்படி...

மேற்கத்திய முறைப்படி ஆகஸ்டு 15-ந் தேதி நள்ளிரவு பிறக்கிறது. எனவே இரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்து பஞ்சாங்கப்படி அன்று மங்கலகரமான நாளாகவும் அமைத்தது.

நேரு கண்ட வழி...

நேரு கண்ட வழி...

ஆனால், நேருவும், படேலும் இந்தப் பிரச்சினைக்கு சாஸ்திர ரீதியாக ஒரு வழி கண்டனர். அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி மதியம் நாடாளுமன்றத்தைக் கூட்டிய நேரு, கூட்டத்தொடரை நள்ளிரவு வரை தொடர்ந்து நடத்தினார். இதன் மூலம் ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திர பெற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.

English summary
Britishers chose August 15th to give Independence to India as it is the day in which Japan surrendered in second world war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X