For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோ-ஹிப் ஜீன்ஸ் அணிந்த ஆண்கள் பெண்களை எப்படி காப்பார்கள்.. பாஜக முன்னாள் மகளிரணி தலைவி சர்ச்சை

லோ-ஹிப் ஜீன்ஸ் அணிந்த ஆண்கள் பெண்களை எப்படி காப்பார்கள் என்று ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் மகளிரணி தலைவி சர்ச்சையான கருத்து தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: லோ-ஹிப் ஜீன்ஸ் அணிந்த ஆண்கள் பெண்களை எப்படி காப்பார்கள் என்று ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் மகளிரணி தலைவி சுமன் சர்மா சர்ச்சையான கருத்து தெரிவித்து இருக்கிறார். இவர் இப்போது அம்மாநில மாதர் சங்க தலைவியாக இருக்கிறார்.

இன்று சர்வதேச பெண்கள் தினம் என்பதால் ராஜஸ்தானில் பெண்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்விற்கு சுமன் சர்மா தலைமையேற்று இருந்தார்.

இதில் பேசும் போதே அவர் இந்த சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். மேலும் பெண்களின் சுதந்திரம் குறித்தும் மோசமான கருத்தை கூறியுள்ளார்.

சுதந்திரம்

சுதந்திரம்

அவர் பெண்களின் சுதந்திரம் குறித்து பேசும் போது ''பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால் பெண்கள் அதை வைத்து மக்களின் வாழ்க்கையைவிட்டு மிகவும் அந்நியமாக ஆகிவிடக்கூடாது. சமுதாயத்தில் இருக்கும் சமநிலையை அது பாதிக்கும்'' என்று மோசமான கருத்தை கூறியுள்ளார்.

ஆண்கள்

ஆண்கள்

மேலும் ''முன்பெல்லாம் பெரிய நெஞ்சும், அதில் அதிக முடியும் கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்படி பெரிய நெஞ்சு இருக்கும் ஆண்களை பார்க்கக் முடியவில்லை. லோ ஹிப் அணியும் ஆண்கள்தான் இருக்கிறார்கள். சரியாக ஜீன்ஸ் போடா தெரியாத ஆண்கள் தங்கள் தங்கைகளை எப்படி காப்பார்கள்'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எதற்கு

இதற்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இவர் ''எங்களுக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை மேடம். முதலில் உங்களை மனநிலையை மாற்றுங்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற சமுதாயத்தை உருவாக்குங்கள்'' என்றுள்ளார்.

ஏன் பாதுகாப்பு

இவர் ''பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அளவிற்கு ஏன் சமுதாயத்தை உருவாக்கினீர்கள்'' என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

English summary
How Men in low hip jeans can protect girls asks former chief of the Rajasthan BJP's women's wing Suman Sharma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X