For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரக்கு ரயிலை முந்த நினைத்த பெண்.. அடியில் சிக்கிய "பரிதாபம்".. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

ரோத்தக்: ஹரியானா மாநிலத்தில் சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் காயமின்றி உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

ரோத்தகில் சரக்கு ரயில் ஒன்று சிக்னலை பெறுவதற்காக தண்டவாளத்தில் காத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு பக்கம் ஒரு பெண் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தார்.

அப்போது அவர் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டார். எவ்வளவு முயற்சித்தும் அவரால் எழ முடியவில்லை. அந்த நேரம் பார்த்து சரக்கு ரயிலுக்கு சிக்னல் கிடைத்தது.

ரயிலில் சிக்கிய பெண்

ரயிலில் சிக்கிய பெண்

அப்போது அந்த பெண்ணால் வெளியே வரமுடியாததால் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை, மிகுந்த பதற்றத்துடன் அந்த பெண் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். ஆடாமல் அசையாமல் படுத்திருங்கள் என்று சிலர் அந்த பெண்ணை அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

ரயில் சென்றவுடன் மக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவருக்கு ஒரு சிறு காயமும் இல்லை என்பதை அறிந்து கொண்டு அவரை கைக் கொடுத்து தூக்கிவிட்டனர். பின்னர் ஜாக்கிரதையாக இருக்குமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தினர்.

நன்றி

நன்றி

இதையடுத்து தனக்கு உதவி செய்தவர்களுக்கும் தன்னை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி கூறிய அந்த பெண் ஒன்றுமே நடக்காதது போல் அந்த இடத்தை விட்டு சென்றார். இது போல் சிக்கிக் கொண்டால் பயத்தை விட்டுவிட்டு சமயோஜிதமாக செயல்பட வேண்டும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

டெல்லியிலும் இது போன்ற சம்பவம்

டெல்லியிலும் இது போன்ற சம்பவம்

இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த செப்டம்பர் மாதமும் நடந்தது. டெல்லியில் ஃபரீதாபாத்தில் பல்லப்கார் ரயில் நிலையத்தில் ரயில் வரும் வரை 2 வயது சிறுவன் தன் சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்த போது சகோதரன் தள்ளிவிட்டதால் ரயில் தண்டவாளத்தில் அந்த 2 வயது சிறுவன் விழுந்துவிட்டான். அப்போது அந்த ரயிலுக்கு அடியில் படுத்துக் கொண்டதால் சிறுவன் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
How woman escapes being crushed under the train in Haryana. Here is how it happens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X