உங்களது ஒவ்வொரு அசைவயைும் கண்காணிக்கும் ஸ்மார்ட் போன்கள்! எச்சரிக்கை ரிப்போர்ட்
டெல்லி: உங்களை அறியாமலேயே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரின் விவரம் கூகுளால் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இதனால் தனி நபர்களின் ரகசியம் மீறப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு மனிதனுக்கு தனிமை என்பதே தவிர்க்கப்பட்ட பொருளாகிவிட்டது. நகரங்களில் கேட்கவே வேண்டாம்,
குற்றங்களை தடுக்கிறேன் பேர்வழி என்று தடுக்கிவிழும் இடங்களில் எல்லாம் சிசிடிவி காமிராக்களை பொருத்தி வைத்துள்ளனர்.

சிசிடிவி கேமிரா
பெண்கள் குனிந்து நிமிருவது வரை, ஆண்கள் வேட்டியை அவிழ்த்து கட்டுவதுவரை அனைத்தையும் இந்த காமிராக்கள் கண்களால் சிறை பிடித்து மற்றொருவருக்கு காண்பித்துக்கொண்டுதான் உள்ளன.

ஆண்ட்ராய்டு போன்கள்
இதில் புது வரவுதான் ஆண்ட்ராய்டு போன்கள். ஆண்ட்ராய்டு போன்கள் வைத்துள்ளோர் மற்றும் கூகுள் நவ் வசதியை ஆக்டிவேட் செய்து
வைத்திருப்போர் ரகசியங்கள், தனிமை அனைத்தும் அம்பலமாகிவிடுவதாக குமுறுகின்றனர் விவரம் அறிந்தோர்.

சேமிக்கும் கூகுள்
ஸ்மார்ட் போன் வைத்துள்ளோர்கள் அனைவருமே கட்டாயம், கூகுள் அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்திருப்பார்கள். இதை வைத்து குறிப்பிட்ட நபரின் நடமாட்டத்தை ஸ்டோர் செய்து வைக்கிறது கூகுள்.

மாதக்கணக்கான தகவல்கள்
கூகுள் மேப்பின் செட்டிங்ஸ் பகுதியிலுள்ள location history பகுதியில் இவை அனைத்தும் சேமிக்கப்பட்டுவிடுகிறது. மாதக்கணக்கான
தகவல்களும் இதில் உள்ளன. போனை எடுத்துக் கொண்டு அந்த நபர் எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்த பகுதிகளில் புள்ளிகள்
காணப்படுகின்றன. அவர் பயணித்த சாலைகூட புள்ளிகளால் இணைக்கப்பட்டு ஒரு நொடி கூட விடாமல் காண்பிக்கப்படுகிறது.

ஆப் செய்யலாம்
இதில் ஒரு வசதி என்னவென்றால் இந்த சேவை பிடிக்காவிட்டால் அதை நாம் ஆப் செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானோர்
இதுகுறித்து கவனிக்காமல் விட்டுவிடுவதால் நமது நடமாட்டம் குறித்த தகவல்களை கூகுள் சேமித்து வைக்க உதவிவிடுகிறோம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications