• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாகமணிதான் பால் கொடுத்தது.. குடிச்சுட்டுதான் மயங்கி விழுந்தேன்.. கணவர் கொடுத்த திகில் வாக்குமூலம்

|
  மோர் கொடுத்த நாகமணி..சுருண்டு விழுந்த புது மாப்பிள்ளை

  கர்னூர்: "என் பொண்டாட்டி நாகமணி எனக்கு பால் கொடுத்தா.. அதை குடிச்சிட்டுதான் நான் மயங்கி விழுந்துட்டேன்.. அவதான் என்னை கொல்ல பார்த்தாள்" என்று சொன்ன கணவன், போலீசாரின் தீவிர விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளார்.

  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கு மதனந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுடன் 9 நாளைக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.

  9-வது நாளில் நாகமணியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்ல, லிங்கமையா மதனந்தபுரம் வந்தார். கணவன் வீட்டுக்கு வரவும், நாகமணி பால் கொண்டு வந்து குடிக்க சொன்னார்.

  விசாரணை

  விசாரணை

  புது பொண்டாட்டி ஆசையாக தரவும், அதை வாங்கி குடித்தார் லிங்கமையா.. ஆனால் அடுத்த சில நிமிஷத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினரின் மாப்பிள்ளையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர். அங்கு இப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  கல்யாணம்

  கல்யாணம்

  இதை பற்றி லிங்கமையா குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். "நாகமணிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை போல தெரிகிறது.. ஒருவேளை அவங்க வீட்டில் கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிருப்பாங்களோ என்று சந்தேகமாக இருக்கு" என்று தெரிவித்தனர்.

  விசாரணை

  விசாரணை

  பாலில் விஷம் கலந்ததா, நாகமணிதான் பாலில் விஷம் கலந்திருப்பாரா, அல்லது அவருக்கே தெரியாமல் இது நடந்ததா என்று தெரியவில்லை.. எதுவானாலும் முழு விசாரணைக்கு பிறகுதான் உண்மைத்தன்மை வெளியே வரும் என்றார்கள்.

  லிங்கையா

  லிங்கையா

  இந்த நிலையில் தனது உறவினர்களிடம் தன்னை தன்னை கொலை செய்வதற்காக பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்று லிங்கையா சொல்லவும், இது பெரிய பிரச்சனையாக வெடித்தது. "நாங்க மாப்பிள்ளைக்கு பால் மட்டும்தான் தந்தோம்.. விஷம் தரவே இல்லை.. 8 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் செய்து, எங்க பொண்ணை நாங்க இப்படி செய்வோமோ" என்று நாகமணியின் பெற்றோர்கள் கதறினர்.

  கொலை பழி

  கொலை பழி

  இதையடுத்துதான், லிங்கையாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போதுதான் எல்லா விஷயமும் வெளியானது. லிங்கையா அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தாராம்.. ஆனால் வீட்டில் நாகமணியை கட்டி வைத்து விட்டார்களாம்.. இந்த கல்யாணம் பிடிக்காமல், பிரிந்து செல்லதான், நாகமணி மீது கொலை பழியை சுமத்த லிங்கையா பிளான் பண்ணினாராம். அதற்காக, நாகமணி தந்த பால் தந்தபோது, அதை வாங்கி குடிக்காமல், ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த பூச்சி மருந்தை யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டார்.

  காதலி

  காதலி

  பிறகு, மயங்கியும் விழுந்துவிட்டார்.. நாகமணி மீது கொலை பழியை சுமத்திவிட்டால், காதலியை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் லிங்கையாவின் திட்டமாம். இப்போது, அந்த காதலி, லிங்கையாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் ஒன்றுமே அறியாத அப்பாவி நாகமணியின் பெயரை கெடுத்து, வாழ்க்கையையும் சீரழித்ததைதான் குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  newly married husband blames wife for marrying her lover and attempts suicide near kurnool
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more