For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா பிரதமரா? இப்போதும் ஏற்க முடியாது என்கிறார் சுஷ்மா சுவராஜ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை, இந்தியாவின் பிரதமராக ஏற்க முடியாது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்த கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''நமது நாடு 150 ஆண்டுகளுக்கு மேலாக அன்னியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது.

Sushma Swaraj

நமது நாடு சுதந்திரம் அடைய, நம் முன்னோர்கள் எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அப்படி, உயிர் தியாகம் செய்து வெளிநாட்டவர்ரிடம் இருந்து சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரிய பதவிக்கு ஒரு வெளிநாட்டவரை அமர வைப்பது, இந்த நாட்டில் உள்ள 100 கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றே ஆகிவிடும். இது மக்களின் உணர்வுகளை பெரிதளவில் பாதிக்கும்.

சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திராகாந்தியின் மருமகளாகவும் மட்டுமே நமது அன்பையும் நேசத்தையும் பெற்றுள்ளார்.

சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரை மரியாதையுடன் பார்க்கிறோம். ஆனால், இந்தியாவின் பிரதமராக வர விரும்பினால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

English summary
The issue of Sonia Gandhi's foreign origin cropped up yet again today with Bharatiya Janata Party leader Sushma Swaraj saying she was still opposed to the idea of her becoming the Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X