சீன தூதரை சந்தித்தது ஏன் ? ராகுல் காந்தி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சீன தூதரை சந்தித்தது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியிலுள்ள சீன தூதருடன் ராகுல்காந்தி நேற்று சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - சீனா எல்லை பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் சீன தூதரை ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I met the Chinese Ambassador, Ex-NSA, rahul gandhi

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பூடான் தூதர் ஆகியோரை சந்தித்து பேசினேன். நாட்டின் சிக்கலான சூழ்நிலை குறித்து எடுத்துரைப்பது எனது கடமை. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் இந்திய எல்லையில் சீன துருப்புகள் நுழைவதைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது எனவும் சீன தூதர் பற்றி கேள்வி எழுப்பும் மத்திய அரசு 3 அமைச்சர்கள் சீனா சென்றது பற்றி விளக்கம் அளிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சிக்கிம் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் 3 மத்திய அமைச்சர்கள் சீனா சென்றது என்றும் கேட்டுள்ளார்.

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்று ராகுல்காந்தி 2 தினங்கள் முன்பு டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I met the Chinese Ambassador, Ex-NSA, says congress vice president rahul gandhi
Please Wait while comments are loading...